சென்னை
போக்குவரத்து நெரிசலைக் குறைக் கும் வகையில் தியாகராய நகர் பகுதியில் ஒருவழிப் பாதைகள் இருவழிப் பாதைளாக மாற்றப் பட்டுள்ளன.
சென்னையில் பல்வேறு இடங் களில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிக நெரிசல் ஏற்படு கிறது. இதைக் குறைக்க சில முக்கிய சாலைகளில் ஒருவழிப் பாதைகளை இருவழிப் பாதை களாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து ஒருவழிப் பாதையாக உள்ள முக்கிய சாலை களைத் தேர்வு செய்து அதை இரு வழிப் பாதைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக தியாகராயநகர் பகுதிகளில் உள்ள ஒருவழிப் பாதைகளை இருவழிப் பாதைகளாக மாற்ற போக்கு வரத்து போலீஸார் ஆலோசித்து வந்தனர்.
அதன்படி, சோதனை முயற்சி யாக நந்தனம் சேமியர்ஸ் சாலை - வெங்கட்நாராயணா சாலை இரு வழிப் பாதையாக மாற்றப் பட்டுள்ளது. இதேபோல், தியாக ராயநர் ஜி.என் செட்டி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் சாலையும் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், தியாகராயநகர் வடக்கு போக் சாலை முழுவதும் இரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. அதேபோல், நந்தனம் தேவர் சிலை அருகிலும் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியாக இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்குப் பயன் அளித்து போக்குவரத்து நெரிசல் குறைந்தால் இந்த மாற்றம் நிரந்தரமாக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.