சென்னை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் உள்ளிட்ட நிர் வாகிகள் பதவிகளுக்கான தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 25 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி நடந்தது. இந்த தேர் தலில் மொத்தம் 198 பேர் போட்டியிட் டனர். இந்த தேர்தல் தொடர்பான முறைகேடு புகார்கள் வந்தால் அது தொடர்பாக விசாரித்து தீர்வு கண்ட பிறகே முடிவுகளை வெளியிட வேண் டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது.
இதன் காரணமாக தேர்தல் முடிவு கள் ஓராண்டு கடந்த பிறகும் வெளியிடப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந் தது. இந்நிலையில் இந்த தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட 22 புகார்களை அகில இந்திய பார் கவுன்சில் தீர்ப் பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த தேர்தலில் போட் டியிட்ட பி.எஸ்.அமல்ராஜ், ஆர்.சி.பால் கனகராஜ், எஸ்.பிரபாகரன், ஆர்.விடு தலை, கே.பாலு, ஜி.மோகனகிருஷ் ணன், வி.கார்த்திக்கேயன், கேஆர்ஆர்.அய்யப்பமணி, ஜெ.பிரிஸில்லா பாண் டியன், என்.மாரப்பன், எம்.வேல்முரு கன், டி.செல்வம், ஆர்.அருணாச்சலம், ஆர்.அய்யாவு, பி.அசோக், கே.கதிர வன், ஆர்.சிவசுப்பிரமணியன், எம்.வர தன், டி.தாளைமுத்தரசு, கே.சந்திர மோகன், சி.முருகன் என்ற முருகா, ஏ.கோதண்டம், டி.சரவணன், டி.மைக் கேல் ஸ்டானிஸ் பிரபு, எம்.ராஜேந்திர குமார் ஆகிய 25 பேர் பார் கவுன் சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக் கப்பட்டனர்.
இந்த 25 பேரில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் அகில இந் திய பார் கவுன்சில் உறுப்பினர் ஆகிய 3 பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூலை 29-ம் தேதி காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற வுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடந்தது. இந்த தேர்தல் பார்வையாளராக உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சி.காண்ட்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவிக்கு ஆர்.சி.பால்கனகராஜ் மற் றும் பி.எஸ்.அமல்ராஜ் ஆகிய இரு வரும் வேட்புமனுவை முறைப்படி தேர்தல் அதிகாரியான பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமாரிடம் தாக்கல் செய்தனர். இதனால் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதேபோல துணைத் தலைவர் பதவிக்கு ஆர்.சிவசுப்பிரமணியன், எம்.வேல்முருகன், வி.கார்த்திக்கேயன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு ஆர்.சி.பால்கனகராஜ், எஸ்.பிரபா கரன், டி.செல்வம், ஆர்.விடுதலை ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய் துள்ளனர். இவர்களின் வேட்புமனுக் கள் பரிசீலிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப் பட்டதாக தேர்தல் அதிகாரி சி.ராஜ குமார் அறிவித்தார்.
அதன்படி தேர்தல் நடைபெறும் நாளான ஜூலை 29-ம் தேதியன்று காலை 10.30 மணிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு காலக்கெடு நிர் ணயிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை எனில் 25 பேரில் யார் அதிக ஓட்டுக்களைப் பெறுகின் றனரோ அவர்கள் இந்த 3 பதவி களுக்கும் தேர்வு செய்யப்படுவர். இதனால் இந்த 3 பதவிகளையும் பிடிக்க பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி நில வுகிறது.