தமிழகம்

சவீதா மருத்துவக் கல்லூரியில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்

செய்திப்பிரிவு

சென்னை தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இதுபற்றி சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் எப்சிபன், குமுதம் ஆகியோர் கூறியதாவது:

சவீதா மருத்துவக் கல்லூரியில் மோகனப் பிரியா (21) என்பவருக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் சிசேரியன் முறையில் பிறந்துள்ளன. பிறக்கும் குழந்தையின் சராசரி எடை 2 கிலோ ஆகும். 3 குழந்தைகளும் 1.770 முதல் 1.850 கிலோ வரை உள்ளன. எடை குறைவு என்றபோதிலும், குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் கண்காணிப்பில் உள்ளன. இலவச சிகிச்சை மற்றும் மருத்துவத்துடன் குழந்தைகளை ஒரு வாரத்துக்கு இன்குபேட்டரில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருவாக்க சிகிச்சைகளின் காரணமாக, இரட்டைக் குழந்தைகள், 3 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறப்பது பரவலாக நடக்கிறது. ஆனால், 3 குழந்தைகளும் ஒரே இனமாக பிறப்பது அபூர்வமாகவே கருதப்படுகிறது. மோகனப் பிரியாவுக்கு மூன்றும் பெண் குழந்தை களாகப் பிறந்துள்ளன. அவருக்கு ஏற்கெனவே 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

குழந்தைகளை சவீதா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் என்.எம்.வீரய்யன் பார்வையிட்டார்.

SCROLL FOR NEXT