கொலை நடந்த உமா மகேஸ்வரியின் வீட்டில் நேற்று 3-வது நாளாக தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

நெல்லை முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொலை வழக்கு; மதுரையில் திமுக பெண் நிர்வாகியிடம் தனிப்படை போலீஸார் விசாரணை: எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதில் முன்விரோதமா?

செய்திப்பிரிவு

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3-வது நாளாக நேற்றும் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. மதுரையில் உள்ள திமுக பெண் நிர்வாகியிடம் தனிப்படை போலீஸார் நேற்று நேரில் விசாரணை மேற்கொண்ட னர்.

திருநெல்வேலியில் கடந்த 23-ம் தேதி உமா மகேஸ்வரி (65), அவரது கணவர் முருக சங்கரன் (74), வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாள் (35) ஆகியோர், கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் அதிர்ச் சியை ஏற்படுத்திய இந்த 3 பேர் கொலை வழக்கில் குற்றவாளி களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. நகை கள், பணத்தை கொள்ளையடிக்க இந்த கொலைகள் நிகழ்த்தப்பட்டி ருக்கலாம் என்று தொடக்கத்தில் போலீஸார் கருதினர். பின்னர், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச் சினை, அரசியல் ரீதியான பிரச்சி னைகள் போன்ற காரணங்களாலும் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று, வெவ்வேறு கோணங்களில் தனிப்படை போலீஸார் கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தினர்.

உமா மகேஸ்வரியின் வீடு அமைந்துள்ள சாலையும், பாளையங்கோட்டை- திருவனந்த புரம் சாலையும் சந்திக்கும் பகுதி யில் உள்ள ஒரு கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலமும் விசாரணை நடத்தப் பட்டது. அக்காட்சிகளில் 2 வடமாநில இளைஞர்கள் அங்குமிங்கும் சுற்றி வருவது தெரியவந்தது. இதை யடுத்து, அப்பகுதியில் தங்கி கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழி லாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் சங்கரன் கோவில் (தனி) தொகுதியில் போட்டியிட சீட் பெற்றுத்தருவதற்கு உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் ஆகியோரிடம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவர் ரூ.50 லட்சம் வரையில் கொடுத்ததாகவும், ஆனால், உறுதியளித்தபடி சீட் பெற்றுத்தரவில்லை என்பதால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட விவகாரத்தில், கடந்த 2 ஆண்டு களாகவே அவர்களுக்குள் மோதல் இருந்து வந்ததாகவும், அதில் கூலிப் படையை ஏவி உமா மகேஸ்வரி யையும், அவரது கணவரையும் கொலை செய்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோணத்தில் தனிப்படை போலீ ஸார் நேற்று விசாரணை மேற் கொண்டனர்.

இதுதொடர்பாக, உமா மகேஸ் வரிக்கு நெருக்கமான கட்சி பிரமுகர் களிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்ட னர். திமுகவில் மாநில ஆதிதிராவி டர் நலக்குழு செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சீனியம் மாள் என்பவரிடம் விசாரணை நடத்துவதற்காக தனிப்படை போலீ ஸார் நேற்று மதுரைக்கு சென்றனர்.

மதுரையில் கூடல்புதூரில் தனது மகள் வீட்டில் வசித்துவரும் சீனியம்மாளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். உடல்நலம் சரியில்லாமல் கடந்த 6 மாதத்துக் கும் மேலாக மதுரையில்தான் இருப்பதாக சீனியம்மாள் கூறிய தாக தெரிகிறது. திருநெல்வேலியில் உள்ள திமுக பிரமுகர்கள் சிலரிட மும் போலீஸார் விசாரணை நடத்தி னர். ஆனாலும் இதுவரை துப்பு துலங்கவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கொலை நடந்த உமா மகேஸ் வரியின் வீட்டில் நேற்று 3-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி ரேகைகளை மீண்டும் பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT