தமிழகம்

பாமக நிறுவனர் ராமதாஸ் 80-வது பிறந்த நாள்: முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை

பாமக நிறுவனர் டாக்டர் ராம தாஸின் 80-வது பிறந்த நாளை யொட்டி அவருக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராமதாஸுக்கு நேற்று காலை தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, "பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டு, மக்களுக்காக உழைக் கும் தாங்கள் நல்ல உடல் நலத் துடன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ, இறைவனை வேண்டி, என் இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியதாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ராமதாஸுக்கு வாழ்த்து தெரி வித்து அரசியல் கட்சித் தலை வர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: பாமக நிறுவனர் ராமதாஸ் 80 வயதை நிறைவு செய்து 81-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழியை வளர்க்க பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையை நிறுவியவர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்தவர். சமூக நீதி, சமுதாய முன்னேற்றத்துக்காக மகத்தான பணிகள் ஆற்றியவர். அவரது சேவை மென்மேலும் தொடரவும், பல்லாண்டுகள் வாழவும் வாழ்த்துகிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பாமக நிறுவனத் தலைவர் மருத் துவர் ராமதாஸுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். ‘முத்து விழா’வைக் கொண்டாடும் ராம தாஸ், நல்ல உடல்நலத்துடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: சமூக நீதி போராளி, மூத்த அரசியல் தலைவர், பாமக நிறுவனர் ராமதாஸின் 80-வது பிறந்த நாளில் அவரை வாழ்த்தி வணங்குகிறேன். அவரது சமூக, மருத்துவ சேவைப் பணிகளும், நாட்டுப் பணியும் தொடர உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: முத்து விழா கொண்டாடும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இனிய வாழ்த்துகள். எப்போதும் மகிழ்ச்சியும், ஆரோக் கியமும் நிலைத்திருக்க இறைய ருள் அவருக்கு துணை நிற்கட்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மக்கள் நல மருத்துவராக தன் வாழ்வைத் தொடங்கி, பிற்படுத்தப்பட்ட மக்க ளின் உரிமைகளுக்காகப் போராட பாமகவை நிறுவிய டாக்டர் ராம தாஸின் 80-வது பிறந்த நாள் முத்து விழாவாகக் கொண்டாடப்படுவதை அறிந்து மகிழ்ந்தேன். சமூக நீதிக் காக உழைத்து வரும் அவர், பல் லாண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு தொண்டாற்ற காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழ் மக்களின் முன்னேற் றத்துக்காக பாடுபட்டு வரும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு 80-வது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரி விப்பதில் மகிழ்கிறேன். பல்லாண்டு கள் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT