தமிழகம்

அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.186 கோடி நிவாரணம்: 3 லட்சம் பேர் பயனடைவர்; தமிழக அரசு அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை

அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு, ரூ.186 கோடியே 25 லட்சம் இழப்பீட்டுத் தொகை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. இதற் கான அரசாணை வெளியிடப்பட் டுள்ளது.

தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக் கும் மக்காச்சோளம், ஆண்டு தோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், தேனி மாவட்டங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப் படுகிறது.

இந்நிலையில், மாறிவரும் பருவ நிலை காரணமாக மக்காச்சோள பயிரைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழு, தமிழகத்திலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், மக்காச்சோள விவசாயிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக, முதல்வர் உத்தரவை ஏற்று வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினர் பயிர்பாதிப்பை கணக்கெடுத்தனர். அந்த வகையில் சாகுபடி செய்யப் பட்ட, 3 லட்சத்து 55 ஆயிரம் ஹெக்டேரில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 986 ஹெக்டேர் மக்காச்சோளப் பயிர்கள் அமெரிக்கன் படைப்புழு வால் பாதிக்கப்பட்டது கண்டறியப் பட்டது. மாநில பேரிடர் நிவாரண நிதியின் வரையறைகளில் இது போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வழிவகை இல்லாததால், அந்த வரையறைகளில் இதையும் சேர்த்து நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 4-ம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை அளித்த முதல்வர் பழனிசாமி, ‘‘அமெரிக்கன் படைப் புழுவால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 93 ஆயிரத்து 424 விவசாயிகளின் துயர்துடைக்க மாநில பேரிடர் நிவாரண நிதியின்கீழ் இறவை பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, மானாவாரி பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.7,410 என்ற வீதத்தில் ரூ.186 கோடியே 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

இதுதவிர, ஏற்கெனவே பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்து இப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுத்தர வேளாண்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று அறிவித்தார்.

அதன்படி, பூச்சிகள், புழுக் களால் ஏற்படும் பயிர் பாதிப்பை யும் பேரிடர் நிவாரண நிதிக்கான வரையறையில் முதல்முறையாக சேர்த்து, மக்காச்சோள பயிர் பாதிப் புக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படுகிறது.

முதல்வர் அறிவித்தபடி, பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி யாக உதவும் வகையில், ரூ.186 கோடியே 25 லட்சத்து 7 ஆயிரத்து 782 உள்ளீட்டு மானியமாக வழங்குவதற்கான அரசாணையும் வருவாய்த்துறை செயலரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில், தூத்துக்குடி மாவட்டத் தில் அதிகபட்சமாக 40,373 விவசாயி களுக்கு ரூ.33 கோடியே 8 லட் சத்து 50 ஆயிரத்து 33 வழங்கப் படுகிறது. அடுத்ததாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 77,825 விவசாயி களுக்கு ரூ.32 கோடியே 18 லட்சத்து 45 ஆயிரத்து 940-ம், சேலத்தில் 47,441 விவசாயிகளுக்கு ரூ.27 கோடியே 38 லட்சத்து 15 ஆயிரத்து 145-ம் நிவாரணமாக கிடைக்கும்.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT