சென்னை
முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகையை வழங்க வலியுறுத்தி சென்னையில் உள்ள செபி அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஏசிஎல் நிறுவன முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத் தினர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப் பூரை தலைமையிடமாகக் கொண்டு மத்திய அரசின் அங்கீகாரத்தோடு பிஏசிஎல் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. குறைந்த விலைக்கு மனைகள் வழங்குவதாக வும் உறுதி அளித்திருந்தது. இதை நம்பி ஏராளமானவர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த னர். ஆனால் உறுதி அளித்தபடி இந்த நிறுவனம் செயல்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும், முதலீட்டாளர்களிடம் பெற்ற முதலீடுகளை அந்த நிறுவ னம் தனது பெயரில் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்ததா கவும், இந்தியா முழுவதும் செயல் பட்ட இந்த நிறுவனத்தில் 6 கோடிக் கும் மேற்பட்டோர் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடாக கட்டியிருந்ததாகவும் கூறப்படு கிறது. ஆனால், இந்த நிறுவனம் பங்குதார்களின் முதிர்ச்சி பணத் தொகையை திரும்பக் கொடுக்கா மல் தொடர்ந்து இழுத்தடித்துள்ளது.
இதற்கிடையே நாடு முழுவ தும் உள்ள தங்களது கிளை களை பிஏசிஎல் நிறுவனம் மூடியது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனத் தின் நிலம் மற்றும் சொத்துகளை விற்று 6 மாதங்களுக்குள் முதலீட் டாளர்களுக்கு பணத்தை வழங்க வேண்டும் என 2016 பிப்ரவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், நீதிபதி ஆர்.எம். லோதா (ஓய்வு) தலைமையில் கமிட்டி அமைத்து இப்பணிகளை செய்யப் பணித்தது. அதன்படி, ஒரு கமிட்டியை செபி (இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம்) அமைத்தது.
இதற்கிடையே பிஏசிஎல் நிறு வனம் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டதோடு பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துகளை மதிப்பீடு செய்து அதை விற்பனை செய்யும் பணியிலும் செபி ஈடுபடத் தொடங்கியது.
அடுத்த கட்டமாக முதலீட்டாளர் களுக்கு பணத்தைத் திருப்பித் தர செபி நடவடிக்கை மேற்கொண்டது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், 40 மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது வரை உரிய நிவாரணம் கிடைக்க வில்லை என முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், பிஏசிஎல் நிறு வன முதலீட்டாளர்களுக்கு நிபந் தனையின்றி முதிர்வுத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி பிஏ சிஎல் முதலீட்டாளர்கள், பிஏசிஎல் களப்பணியாளர்கள் சங்கம் மற் றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பிஏசிஎல் போராட்டக் குழுவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள செபி அலுவலகத்துக்கு வந்து முற்று கையிட்டனர்.
தொடர்ந்து உள்ளேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத் துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் செபி அலுவல கத்துக்குள் திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.
இதற்கிடையே, “முதலீட்டாளர் களின் முதிர்வுத் தொகை கிடைக் கும்வரை போராட்டம் தொடரும். அதுவரை யாருக்கும் எந்த தொந் தரவும் கொடுக்காமல் செபி வளாகத்துக்குள்ளேயே காத் திருப்பு போராட்டம் நடத்துவோம். மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு பாதிக் கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும்" என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் அழைத்து செபி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 15 நாட்களில் சுமூக தீர்வு காணப்படும் என்றனர்.