பிரேக் செயல் இழந்த பஸ்ஸை கல்லை போட்டு நிறுத்தும் இளைஞர்கள். 
தமிழகம்

பிரேக் செயல் இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பஸ்: கல்லை போட்டு நிறுத்திய இளைஞர்கள்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் 

திண்டுக்கல்லில் பிரேக் செயல் இழந்து தாறுமாறாக ஓடிய பஸ்ஸை, இளைஞர்கள் டயரின் அடியில் கல்லை தூக்கிப் போட்டு நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து சிலுக்குவார்பட்டிக்கு அரசு பஸ் 25 பயணிகளுடன் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. பேகம்பூர் என்ற இடத்தில் பஸ் சென்றபோது ஓட்டுநர் பிரேக்கை அழுத்தியபோது, அது செயலிழந்தது தெரியவந்தது. இதனால் பஸ்ஸை கட்டுப்படுத்த ஓட்டுநர் சாலையோரம் இருந்த மக்களின் உதவியை கோரினார்.

இதையடுத்து இளைஞர்கள் சிலர் சாமர்த்தியமாக பெரிய கல்லைப் போட்டு டயரைதடுத்து பஸ்ஸை நிறுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. இதுகுறித்து போக்குவ ரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியது: அரசு பஸ்ஸை முழுவது மாக பழுதுநீக்க பணி மனைக்கு அனுப்பினோம். அப்பணியை மேற் கொண்ட ஊழியர்களிடம்விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT