சென்னை
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக அதிகனமழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
தற்போது அம்மாநிலங்களில் பருவமழை குறைந்து வருகிறது. அதனால் தமிழகத்தில் சில தினங்களுக்கு பருவக் காற்றால் ஏற்படும் மழை பெய்ய வாய்ப் பில்லை. அதே நேரத்தில், வெப்பம் அதிகரித்து, அதனால் ஏற்படும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், நீலகிரி, கோவை, தேனி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சா வூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகம், சேலம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், திருவள்ளூர் மாவட் டம் சோழவரம், சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சேலம் மாவட் டம் ஏற்காடு, கோவை மாவட்டம் வால்பாறை, சின்னகள்ளார், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப் பாக்கம், மாதவரம், சென்னை விமானநிலையம் ஆகிய இடங் களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு ந.புவியரசன் தெரிவித்தார்.