தமிழகம்

ஆண்டுக்கு ரூ.100 கோடி இழப்பு; அம்மா உணவகங்களுக்கு தனி நிதி ஆதாரம்: சென்னை மாநகராட்சி திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் ஆண்டு தோறும் ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுவதை தடுக்க, தனி நிதி ஆதாரத்தை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட் டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் தலா 2 உணவகங்கள், 7 அரசு மருத்துவ மனைகளில் தலா 1 உணவகம் என மொத்தம் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் காலையில் இட்லி, பொங்கல், பிற்பகலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், இரவில் சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் ஆகியவை மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

அம்மா உணவகங்களில் இது வரை 61 கோடியே 72 லட்சம் இட்லி கள், 20 கோடியே 93 லட்சம் பல வகை சாதங்கள், 28 கோடியே 46 லட்சம் சப்பாத்திகள் விற்பனையாகியுள்ளன. தினமும் சுமார் 3.5 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்.

இந்த உணவகங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். உணவகங்களுக்கான மளிகை பொருட்கள், காய்கறிகள், சமை யல் காஸ் ஆகியவற்றை டியுசிஎஸ் கூட்டுறவு சங்கம் வழங்கி வரு கிறது.

மலிவு விலையில் உணவு வழங்கப்படுவதால், வருவாயை விட, உணவகங்களை நடத்து வதற்கான செலவு பன்மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் டியுசிஎஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.25 கோடிக்கு மேல் மாநகராட்சி நிலுவை வைத்துள்ளது. மகளிர் குழுக்களுக்கும் ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் மாநகராட்சி உள்ளது.

இந்நிலையில் உணவுக் கட் டணத்தை உயர்த்தாமல், மாற்று வழி யில் வருவாய் ஈட்டி, செலவினங் களை ஈடுகட்ட மாநகராட்சி திட்ட மிட்டுள்ளது. அதற்காக மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசூதன் ரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக் குழுவினர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, மாநகராட்சி ஆணை யரிடம் அறிக்கை அளித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகள் கூறியதாவது: அம்மா உணவகத்துக்கு என தனி நிதி ஆதாரத்தை சுமார் ரூ.500 கோடி அளவில் ஏற்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. அதற்கான நிதி, தொண்டு நிறுவனங்கள், கொடை உள்ளம் கொண்டவர்கள், தொழி லதிபர்கள், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்ட நிதி ஆகியவை மூலம் பெறப்பட உள்ளது. அதன் மூலம் வரும் வட்டியை கொண்டு அம்மா உணவகங்களை நடத்த லாம். அங்கே, டீ, காபி போன்ற வற்றை விற்கலாம் என 8 வகையான யோசனைகள், ஆணை யரிடம் வழங்கப்பட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளன. இது குறித்து, முதல்வர் பழனிசாமி யுடன் ஆலோசித்து, அவரது ஒப்பு தலின் பேரில் அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT