சென்னை
தமிழகத்தில் அரசு டாக்டர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை சுமார் 18,000 டாக்டர்கள் பணி யாற்றி வருகின்றனர். தினமும் உள்நோயாளிகள், புறநோயாளி கள் என லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண் ணிக்கை நாளுக்குநாள் அதி கரித்து வருகிறது. ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் இல்லை. இதனால், டாக்டர்களின் பணிச்சுமை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மன அழுத்தம், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள அரசு டாக்டர் கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு, விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டாரத்தில் நடமாடும் மருத்துவக் குழுவில் பணிபுரிந்து வந்த டாக்டர் வருண் (31) என்பவர் பணியின்போது ரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 13 அரசு டாக்டர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதுதொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) மாநில நிர்வாகி பெருமாள் பிள்ளை கூறியதாவது:
தமிழக சுகாதாரத் துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னு தாரணமாகத் திகழ்கிறது. சர்வ தேச தரத்தில் தமிழக சுகாதாரத் துறை உள்ளது என்று தமிழக முதல்வரும், சுகாதாரத் துறைச் செயலர்களும் பெருமையாகத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இதற்காக உழைக் கும் அரசு டாக்டர்களின் ஊதியம், மற்ற மாநிலங்களில் பணிபுரியும் டாக்டர்களின் ஊதியத்தோடு ஒப்பிடும்போது மிகவும் குறை வாக உள்ளது.
மற்ற மாநிலங்களைவிட தமிழ கத்தில் உள்ள அரசு டாக்டர்கள் மாதம் சுமார் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் குறை வாக பெறுகின்றனர். அரசு மருத் துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள் ளது. குறைவான ஊதியம், பணிச் சுமை அதிகரிப்பால் அரசு டாக்டர் கள் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத் துக்கு ஆளாகின்றனர். இதுவே அரசு டாக்டர்களின் உயிரிழப் புக்கு முக்கிய காரணமாகும். இந்தி யாவிலேயே தமிழகத்தில்தான் அரசு டாக்டர்கள் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
ஊதிய உயர்வு கேட்ட அரசு டாக்டர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதுகூட தர்ணா, தொடர் உண் ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங் களில் ஈடுபட்டோம். ஆனால், தமிழக அரசு டாக்டர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற முன்வர வில்லை.
பதவி உயர்வு, ஊதியம்
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும். எம்சிஐ விதிப்படி டாக்டர்களின் எண்ணிக்கையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குறைக்கக்கூடாது.
நோயாளிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப மருத்துவர்கள் எண் ணிக்கையை அதிகரிக்க வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்துள்ள அரசு டாக்டர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக மக்களின் நலன்கருதி மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.