மனு கொடுக்க வந்த ராஜேஸ்வரி. 
தமிழகம்

விருத்தாசலம் அருகே பாகப்பிரிவினைக்காக 21 ஆண்டுகளாக தொடர்ந்து மனு கொடுக்கும் பெண்: இதுவரை தீர்வு கிடைக்கவில்லை

செய்திப்பிரிவு

விருத்தாசலம்

விருத்தாசலம் கோட்ட அளவிலான குறைதீர் கூட்டம் ஆட்சியர் அன்புச் செல்வன் தலை மையில் நேற்று விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது. இதில் வேப் பூர், திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு மனு அளித்தனர்.

இளம் பெண் விரக்தி

இதில், விருத்தாசலம் வட்டம் இருளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் பட்டா பிரச் சினை தொடர்பாக பல ஆண்டுக ளாக தொடர்ந்து மனு அளித்திருப் பதாக விரக்தியோடு தெரிவித்தார். மேலும் விசாரித்த போது, "எனது தந்தை இறந்து 21 ஆண்டுகள் ஆகிறது. அதுமுதல் பாகப்பிரி வினைத் தொடர்பாக மனு அளித்து வருகிறோம். இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. 12 ஆண்டுகள் தொடர்ந்து மனு அளித்த எனது தாய் இடையில் மனநிலை பாதித்து மாயமானார். இதையடுத்து நானும் தொடர்ந்து மனு அளித்து வருகி றேன். எனக்கு தற்போது 32 வயதா கிறது. எனது பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை" என தெரி வித்தார்.

4 ஆண்டுகளாக காத்திருப்பு

இதேபோல் பூதாமூரைச் சேர்ந்த ஊனமுற்ற பெண் சுமதி என்பவர் 3 சக்கர மோட்டார் சைக்கிள் கோரி கடந்த 2015-ம் ஆண்டு முதல் மனு அளித்து வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "மனு கொடுக்கும் போதெல்லாம் பயனாளிகள் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே வழங் கிவிடுவோம் என்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக பயனாளிகள் பட்டி யலில் பெயர் இருக்கிறதே தவிர, வாகனம் கிடைத்த பாடில்லை" என்றார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட் சியர் அலுவலக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "நில அளவையர் கள் காலிப் பணியிடங்கள் உள்ளன. குறைந்த அளவிலான பணியாளர் களைக் கொண்டு தான் நில அளவை பணிகள் நடைபெறுகின்றன. முன்பெல்லாம் ஒரு ஏக்கர் விவசாய நிலமெனில் ஒருவர் தான் உரிமையா ளர். தற்போது விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு ஏராளமான உரிமையாளர்கள் உருவாகி விடுகின்றனர். அதனை ஒரேநாளில் அளவீடு செய்ய இயலாது. பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இவற்றைக் களைந்தால் தான் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். மற்ற துறைகளிலும் இதே நிலை தான். பணியாளர்கள் குறைபாட்டை சரிசெய்தால் தான், மக்களின் குறைகளுக்கு தீர்வு காணமுடியும்" என தெரிவித்தனர்.

ஆட்சியர் எச்சரிக்கை

கோட்ட குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர், பின்னர் அனைத்து துறை அலுவலர்களை யும் அழைத்து ஆலோசனை நடத் தினார். இக்கூட்டத்தில் அவர் பேசு கையில், "இந்தக் கூட்டத்தின் மூலம் 850 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மீது வரும் ஆகஸ்டு 14-ம் தேதிக்குள் தீர்வு காணவேண்டும். தற்போது மனு கொடுத்தவர்கள், மீண்டும் மனு அளித்தால், அந்த மனுவை பரிசீலித்த அலுவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மனுதாரர் எவராவது தீக்குளிப்பு, விஷம் அருந்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட் டால் மனுதாரர் வசிப்பிடத்தின் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நிலப் பிரச்சினை தொடர்பான மனுக் கள் மீது பொத்தாம் பொதுவாக பதிலளிக்காமல், மனுதாரர் இடத் திற்குச் சென்று விசாரித்து செயல்பட வேண்டும்" என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

SCROLL FOR NEXT