காஞ்சிபுரம் அத்திவரதரை முதல்வர் பழனிசாமி நேற்று தரிசனம் செய்தார். அப்போது, சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்களிடம், வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். 
தமிழகம்

காஞ்சியில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை; ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர்- தரிசனத்துக்கு பிறகு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

காஞ்சியில் அத்திவரதரை முதல்வர் பழனிசாமி நேற்று தரிசனம் செய்தார்.

அத்திவரதரை தரிசிப்பதற்காக முதல்வர் பழனிசாமி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு நேற்று மாலை வந்தார். இதை யொட்டி மேற்கு கோபுர வாசல் களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

முதல்வரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, அதிமுக மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அத்திவரதரை தரிசனம் செய்த முதல்வர் பின்னர் அங்கு பக்தர் களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.முதல்வர் வருகையையொட்டி சுமார் 15 நிமிடங்கள் மட்டும் பொது தரிசனம் நிறுத்தப்பட்டிருந்தது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் விழா குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோ சனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT