கோப்புப் படம் 
தமிழகம்

‘தமிழ் கற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’

செய்திப்பிரிவு

சென்னை

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர் பணிபுரிகின்றனர். தமிழக அரசின் பணியாளர் பணி நிபந் தனைகள் சட்டப்படி 2 ஆண்டு களுக்குள் டிஎன்பிஎஸ்சி நடத் தும் தமிழ் மொழிக்கான கட் டாயத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கை: சட்ட விதிகளைப் பின்பற்றி பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழ் தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அறிக்கையாக முதன்மைக் கல்வி அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தமிழ் தேர்வை முடிக்காதவர் கள் மீது துறைரீதியாக தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT