சேலம்
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி யில் திறக்கப்பட்டுள்ள நீர் நேற்று காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று மாலை நில வரப்படி விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
காவிரியின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்டுள்ள அணைக்கு வழக் கமாக, தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும் நீர்வரத்து அதிக ரிக்கும். எனினும், நேற்று முன் தினம் வரை மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 233 கனஅடி யாக மட்டுமே காணப்பட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு, கர்நாடகா அணை களில் இருந்து ஜூன் மாதம் 9.19 டிஎம்சி., மற்றும் ஜூலை மாதம் 31.24 டிஎம்சி அளவுக்கு திறக்க வேண்டிய நீரும் காவிரியில் திறக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே, காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த 18-ம் தேதி கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.
பருவமழை வலுத்துள்ளதால், கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 6,019 கனஅடி, கபினி அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா அணைகளில் திறக்கப் பட்ட காவிரி நீர் நேற்று காலை 7 மணி யளவில் மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியான பண்ணவாடிக் குள் நுழைந்தது. இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, "மேட்டூர் அணைக்கு தொடக் கத்தில் 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மதிய நிலவரப்படி 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித் தது. இது மாலையில் விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியைக் கடந்தது" என்றனர். அணையின் நீர் மட்டம் நேற்று காலை 39.13 அடியாகவும், குடிநீருக்கான நீர் திறப்பு விநாடிக்கு 1,000 கனஅடியாகவும் இருந்தது.
தருமபுரி
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு பகுதியில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 6,500 கன அடி நீர்வரத்து என்ற நிலையை எட்டியது. தொடர்ந்து சீராக நீர்வரத்து அதிகரித்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி விநாடிக்கு 7000 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில அணைகளில் உபரி நீர் திறப்பு தொடர்வதாலும், ஒகேனக் கல்லில் சீராக நீர்வரத்து அளவு உயர் வதாலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்துள்ளது.