தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே குழந்தையை விற்றதாக 2 மருத்துவர்கள் கைது: குழந்தையை வாங்கிய தம்பதியும் கைது

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே குழந்தையை விற்றதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு பேரையும், குழந்தையை வாங்கியதாக கணவன், மனைவியையும் போலீஸார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகள் ராஜலட்சுமி. இவருக்கு 2015-ல் திருமணம் நடைபெற்றது.

இவர் பிரசவத்துக்காக எம்.ரெட்டியபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந் தது. ஆனால், குழந்தை இறந்து விட்டதாக முத்துலட்சுமி தனது மகளிடம் கூறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததும், அது உயிருடன் இருப்பதும் ராஜ லட்சுமிக்கு தெரிய வந்தது.

இது குறித்து எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் ராஜலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் முத்துலட்சுமியிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் குழந்தையை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்ததாகக் கூறி உள்ளார். மேலும் முத்துலட்சுமி முரணான பதில் அளித்ததால் போலீஸாருக்கு சந்தேகம் அதிகரித்தது. பிரசவம் நடைபெற்ற தனியார் மருத்துவமனையிலும், மருத்துவர்கள் வடிவேல் முருகன்(50), அவரது மனைவி வினோதமயந்தி(49) ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அருப்புக்கோட்டை மணி நகரத்தில் வசிக்கும் ஜெய ராஜ், மனைவி சண்முகப்பிரியா தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததும், அவர்களுக்கு இக்குழந்தையை விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையை விற்றதாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரு மருத்து வர்களையும், குழந்தையை வாங்கிய ஜெயராஜ், மனைவி சண்முகப்பிரியா ஆகியோரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT