வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்த கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடைபெற்றது. படம்: வி.எம். மணிநாதன் 
தமிழகம்

வேலூர் மக்களவை தேர்தலில் 28 பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

வேலூர் 

வேலூர் மக்களவைத் தேர்தலில் 31 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேச்சை வேட்பாளர் கள் 3 பேர் நேற்று தங்களது மனுக்களை திரும்பப் பெற்றனர். இதன் மூலம் தேர்தலில் ஏ.சி.சண்முகம், கதிர்ஆனந்த் உட்பட 28 பேர் போட்டியிட உள்ளனர்.

வேலூர் மக்களவைத் தொகு திக்கு வரும் ஆக. 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான மனுத் தாக்கல் கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 50 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது கடந்த 19-ம் தேதி பரிசீலனை நடைபெற்றது.

இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சிகளின் மாற்று வேட்பாளர் கள், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி யின் வேட்பாளர்கள் சார்பில் தாக் கல் செய்யப்பட்ட கூடுதல் மனுக் கள், குறைபாடுகளுடன் இருந்த மனுக்கள் என மொத்தம் 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 31 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் மனுக்களை திரும்பப்பெற நேற்று கடைசி நாள். நேற்று பிற்பகல் 3 மணிக்கு முன்பாக சுயேச்சை வேட்பாளர் களாக மனுத்தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பி னர் வாலாஜா ஜெ.அசேன் மற்றும் ஏ.ஜி.சண்முகம், தனலட்சுமி ஆகி யோர் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். இதன் மூலம் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டி யிடும் வேட்பாளர்கள் 28 பேர் என இறுதியானது.

அதிமுக கூட்டணி வேட்பாள ராக ஏ.சி.சண்முகம், திமுகவின் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார் பில் தீபலட்சுமி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

பணிகள் மும்முரம்

வேட்பாளர்களுக்கான சின்னங் கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் புகைப்படத்துடன் கூடிய வேட் பாளர்கள் பட்டியல், சின்னங்களை பொருத்துவதற்கான சீட்டு அச்சிடும் பணி தொடங்கப்பட உள்ளது. தேர்தலில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த உள்ளனர்.

துணை ராணுவப்படை

இதற்கிடையே தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்காக 10 கம்பெனி துணை ராணுவப் படையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேலும் 10 கம்பெனி படையை அனுப்பும்படி தேர்தல் ஆணையத் திடம் கோரியுள்ளோம்.

75 பறக்கும் படையினர்,39 நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 12 வீடியோ கண்காணிப்பு குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூ ரில் மொத்தம் உள்ள 1553 வாக்குச் சாவடிகளில் 179 சாவடிகள் பதற்றமானவையாக கருதப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத் தப்படுகிறது. புதிதாக சேர்க்கப் பட்டுள்ள வாக்காளர் பெயர்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப் படும். இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறினார்.

SCROLL FOR NEXT