தமிழகம்

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தின் தற்போதைய நிலைப்பாடு குறித்து பதில் தரவேண்டும்: பிரமாணப் பத்திரமாக இன்று தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

செய்திப்பிரிவு

சென்னை/புதுடெல்லி 

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்று பிரமாணப் பத்திர மாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலம் - சென்னை இடையே 8 வழிச் சாலை அமைக்க தேசிய நெடுஞ் சாலைத் துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது.

இந்த திட்டத்துக்காக விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வனப்பகுதிகள் கையகப் படுத்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த திட்டத்துக்கான அறிவிப்பா ணையை ரத்து செய்து, நிலம் கையகப்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத் தரவை எதிர்த்து தேசிய நெடுஞ் சாலைத் துறை திட்ட இயக்குநர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கள், ‘‘சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்கும் முன்பாகவே நிலங்கள் சட்ட விரோதமாகக் கையகப்படுத்தப் பட்டுள்ளன. இதில் பல்வேறு தவறு கள் நடந்துள்ளன. அதை சுட்டிக் காட்டியே இந்தத் திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தகுந்த முகாந்திரம் உள்ளது.

எனவே உயர் நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது’’ என மறுப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகள், வழக்கு தொடர்ந்தவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.வி.ரமணா தலைமை யிலான அமர்வில் நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது நீதி பதிகள், ‘‘இந்தத் திட்டத்தை எதிர்த்து எத்தனை பேர் சென்னை உயர் நீதி மன்றத்தை அணுகினர்’’ என்பதை தெரிவிக்க வேண்டும் என்றனர்

அதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தரப்பில், ‘‘நிலங்களை கையகப் படுத்திய பிறகுதான் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைக் கோர முடியும். மேலும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி இத்திட் டத்தை செயல்படுத்த மாட்டோம். எனவே நிலங்களைக் கையகப் படுத்துவதற்கான அனுமதியை மட்டும் கொடுக்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. இந்த திட்டத் துக்கு எதிர்ப்பு இருந்தால் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டியது தானே’ என கருத்து தெரிவித்தனர். மேலும், இந்தத் திட்டத்தை சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்றே செயல்படுத்துவோம் என அளித்துள்ள உறுதிமொழியை பிரமாணப் பத்திரமாக நாளை (இன்று) தாக்கல் செய்யுங்கள்.

அத்துடன் இந்தத் திட்டம் தொடர்பான மத்திய அரசின் தற் போதைய நிலைப்பாடு என்ன என்பதையும், இத்திட்டம் தொடர் பான பொதுமக்களின் கருத்து மற் றும் இந்த திட்டத்தின் சிறப்பம் சங்கள் என்ன என்பதையும் பிர மாணப் பத்திரமாக தாக்கல் செய் யுங்கள்’’ என தேசிய நெடுஞ் சாலைத் துறை ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆக.31-க்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT