தமிழகம்

ஆவடி- தாம்பரம் இடையே புதிய வழித்தடத்தில் 10 மாநகர பஸ்கள் இயக்கம்

செய்திப்பிரிவு

ஆவடி

ஆவடி- தாம்பரத்துக்கு புதிய வழித்தடத்தில் 10 மாநகர பஸ்கள் இயங்கத் தொடங்கின. இதில், 7 பஸ்களை ஆவடியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகராட்சி பகுதி களில் 3.50 லட்சத்துக்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்த மாநகராட்சி பகுதிகளில் கனரக வாகன தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆவடியையொட்டி தனியார் கல் லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆவடியில் இருந்து, காஞ்சி புரம் மாவட்டம் தாம்பரத்துக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படு கின்றன. அந்த மாநகர பஸ்கள், அம்பத்தூர், கோயம்பேடு, வட பழனி, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தாம்பரத்துக்கு செல்கின்றன. இதனால், சுமார் 2 மணி நேரம் கால விரயம் ஆகிறது.

ஆகவே, ஆவடியில் இருந்து, பூந்தமல்லி மற்றும் வண்டலூர்- நெமிலிச்சேரி வெளிவட்டச் சாலை வழியாக தாம்பரத்துக்கு மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அந்த கோரிக்கைகளின் விளை வாக, ஆவடி- தாம்பரத்துக்கு, பூந்தமல்லி மற்றும் வண்டலூர் - நெமிலிச்சேரி வெளிவட்டச் சாலை வழியாக மாநகர பஸ்களை இயக்க அரசு ஏற்கெனவே முடிவு செய்தது.

அந்த முடிவின்படி, ஆவடி-தாம் பரம் புதிய வழித்தடத்தில் 206 என்ற தடம் எண் கொண்ட மாநகர பஸ் கள், ஆவடி பணிமனையில் இருந்து 7 பஸ்கள், தாம்பரம் பணிமனை யில் இருந்து 3 பஸ்கள் என 10 பஸ்கள் இயங்கத் தொடங்கின.

இதில், ஆவடி பணிமனையைச் சேர்ந்த 7 பஸ்களின் இயக்கத்தை நேற்று ஆவடி பஸ் நிலையத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லி யல் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாநகர போக்கு வரத்துக்கழகத்தின் ஆவடி பணி மனை மேலாளர் வெங்கடேசன், அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண் டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT