தமிழகம்

ஜெயலலிதா சொத்துகளின் வழிகாட்டி மதிப்பு எவ்வளவு?- வருமானவரித் துறை அறிக்கை தர உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழி காட்டி மதிப்பு எவ்வளவு என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருமானவரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகியான புகழேந்தி என்பவர் ஒரு மனு தாக்கல் செய் தார். “ஜெயலலிதாவுக்கு சொந்த மாக பல்வேறு இடங்களில் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவற்றை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும்” என்று அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு விசாரித்து வருகிறது. மனுதாரரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அது போல, ஜெயலலிதா செலுத்த வேண் டிய வரி பாக்கிக்காக அவரது போயஸ் தோட்ட இல்லம் உள் ளிட்ட 4 சொத்துகளை முடக்கி வைத்திருப்பதாக வருமானவரித் துறையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கள், “ஜெயலலிதாவின் சொத்து களுக்கு அவரது அண்ணன் மக ளும், மகனும்தான் வாரிசுகள். ஜெயலலிதாவின் வரி பாக்கியை செலுத்தவும் அவர்கள் தயாராக உள்ளனர். எனவே, அவர்களை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்க வேண்டும்” என்றனர்.

இதற்கு மனுதாரர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘‘ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தும் சொத்து ஆட்சியரின் பொறுப்பில் உள்ளன. அதனால், இவர்கள் வாரிசு உரிமை கோர முடி யாது. எனவே, ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர் வாகியை நியமிக்க வேண்டும்’’ என்று மனுதாரரின் வழக்கறிஞர் வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், ‘‘ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை என்றால், அவரது சொத்துகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் மனுதாரரின் நோக்கமா?’’ என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், ‘ஜெயலலிதா மீது தற் போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை’ என்று அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ‘ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த வீடு தற்போது சென்னை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள் ளது’ என்று அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ‘‘ஜெயலலிதா சொத்துகளின் தற் போதைய வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பது குறித்து வரு மானவரித் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT