தமிழகம்

வயிற்றுப்போக்கு, இருமலுக்கு தரமற்ற 26 மருந்துகள்; மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் 

செய்திப்பிரிவு

சென்னை

வயிற்றுப் போக்கு, இருமல் போன்ற வைகளுக்குப் பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் போலி மற்றும் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரி வித்துள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய் யப்படும் மருந்து, மாத்திரைகள், மத்திய - மாநில அரசுகளின் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த மாதத்தில் 843 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 817 மருந்துகள் தரமானவை என உறுதியாயின. அதேநேரத்தில் வயிற்றுப் போக்கு, இருமல், நோய்க் கிருமித் தொற்று, வயிற்றுப் புண் போன்றவைகளுக்குப் பயன் படுத்தப்படும் 26 மருந்துகள் போலி மற்றும் தரமற்றவை என தெரியவந்தது.

இதுதொடர்பாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “போலி மற்றும் தரமற்றவை என கண்டறி யப்பட்டுள்ள 26 மருந்துகளில் பெரும்பாலானவை உத்ராகண்ட், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத் தின் திருவள்ளூர் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்து தரமற்றது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், நுரையீரலுக்கு சுவாசக் காற்றை அனுப்பும் கருவிகள், எக்ஸ்ரே கருவி, புற்றுநோய் சிகிச்சைக்கான பிஇடி கருவி, இதயத் துடிப்பை மீட்கும் மின்னழுத்தக் கருவி, டயாலிசிஸ் கருவிகள் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT