தமிழகம்

ஹாட்லீக்ஸ்: என்னமோ ஒரு கணக்கு இருக்கு!

செய்திப்பிரிவு

ரஜினி அரசியலுக்கு வந்தால் கராத்தே தியாகராஜன் அவர் பின்னால் போய்விடுவார் என்று காங்கிரஸுக்குள் இருக்கும் கராத்தே எதிரிகள் சொல்கிறார்கள். ஆனால், கராத்தே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டே குடைச்சல் கொடுத்ததின் பின்னணியில் தமிழக காங்கிரஸின் முக்கியப் புள்ளி இருக்கிறாராம். “அவரது வழிகாட்டலில் தான் நான் இதையெல்லாம் செய்கிறேன்” என்று கராத்தே இதை வெளிப்படையாகவே பேசியும் வருகிறாராம். தேர்தலில் வாரிசுக்கு சீட் கொடுக்கும் விவகாரம் தொடங்கி அனைத்திலும் கட்சித் தலைமை தன்னை உதாசீனப்படுத்திவிட்டதாகக் கருதும் அந்தத் தலைவர் சமீப காலமாக பாஜக தலைகளுடன் இணக்கம் பாராட்டுவதாகவும் ஒரு செய்தி கசிகிறது. இதையெல்லால் முடிச்சுப்போட்டுப் பேசும் அவரது எதிரிகள், “சொல்ல முடியாது... தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தலைவர் மீண்டும் தனி இயக்கம் கண்டாலும் ஆச்சரியமில்லை” என்கிறார்கள்.

SCROLL FOR NEXT