நாகர்கோவில்
கேரளாவில் மீன் பிடிக்க சென்ற போது சூறைக்காற்றில் சிக்கி படகு மூழ்கியதால் மாயமான குமரி மாவட்ட மீனவர்களில் ஒருவரது உடல் நேற்று கரை ஒதுங்கியது. காணாமல்போன மேலும் 2 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
குமரி மாவட்டம் நீரோடியை சேர்ந்த ஸ்டான்லி, நிக்கோலஸ், ராஜீ, சகாயம், ஜான்போஸ்கோ ஆகிய 5 மீனவர்களும் கேரள மாநிலம் நீண்டகரை துறைமுகத்தி லிருந்து நாட்டுப் படகில் கடந்த 14-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். திடீரென வீசிய சூறைக் காற்றால் எழுந்த ராட்சத அலை யில் சிக்கி படகு கவிழ்ந்தது. அதி லிருந்த 5 மீனவர்களும் தண்ணீருக் குள் விழுந்து தத்தளித்தனர்.
ஸ்டான்லி, நிக்கோலஸ் ஆகிய இருவரும் நீந்தி கரை சேர்ந்தனர். சகாயம், ஜான் போஸ்கோ, ராஜீ மூவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் சகாயத்தின் உடல் நேற்று காலை கேரள மாநிலம் முருக்கம்பாடம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி யது. இதுபற்றி அறிந்த தூத்தூரில் உள்ள சகாயத்தின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஜான்போஸ்கோ, ராஜீ ஆகி யோரை நீண்டகரை துறைமுகம் பகுதிகளில் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.