சென்னை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா ளராக தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள் ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தமிழகம் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் வெற்றிபெற முடியவில்லை. இந்நிலையில் கடந்த 2012 முதல் பொதுச்செயலாள ராக இருந்து வரும் சுதாகர் ரெட்டி உடல்நலக் குறைவால் பதவி விலகுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. மூத்த தலைவர்கள் டி.ராஜா, பினோய் விஸ்வம், அமர்ஜித் கவுர், அதுல் குமார் அஞ்சன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் பொதுச்செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவில் உள்ள சித்தாத்தூர் கிராமத்தில் 1949 ஜூன் 3-ம் தேதி பிறந்தார். தந்தை பி.துரைசாமி. தாயார் நாயகம். மனைவி ஆனி ராஜா அகில இந்திய மாதர் சம் மேளனத்தின் பொதுச்செயலாளர். மகள் அபராஜிதாவும் மாணவர் சங்க பொறுப்பில் இருக்கிறார்.
வேலூர் ஜிடிஎம் கல்லூரியில் பி.எஸ்சி பட்டமும் சென்னையில் பி.எட் பட்டமும் பெற்ற ராஜா, இளம் வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந் தார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வில் தத்துவம் பயின்ற அவர், அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாநிலச் செயலாளராக பணியாற்றினார்.
1994 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வரும் அவர், 2007-ல் நாடா ளுமன்ற மாநிலங்களவை உறுப் பினராக தேர்வு செய்யப்பட்டார். 2013-ல் 2-வது முறையாக மாநிலங் களவை உறுப்பினரான அவரின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள் ளார்.
பாஜகவை வீழ்த்த கூட்டணி
பொதுச்செயலாள ராக தேர்வு செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, “சவால்களும் சோதனை களும் நிறைந்த காலகட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
மோடி தலைமையிலான வலதுசாரி அரசு நாட்டை ஒற்றைத் தன்மை கொண்ட இந்துத்துவ மயமாக்க முயற்சிக்கிறது. உழைக் கும், ஒடுக்கப்பட்ட மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனை எதிர்த்து நாங்கள் உறுதி யாக போராடுவோம். பாஜகவை வீழ்த்த தமிழகத்தைப்போல தேசிய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி உருவாக்க முயற்சிப் போம்” என்றார்.