சென்னை
சென்னை மியூசிக் அகாடமியின் 2019-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு வாய்ப்பாட்டு கலைஞர் டாக்டர் எஸ். செளம்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடனமாமணி பிரியதர்ஷினி கோவிந்த் நிருத்ய கலாநிதி விருது பெறுகிறார்.
2019-ம் ஆண்டுக்கான சென்னை மியூசிக் அகாடமியின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று காலை நடைபெற்ற மியூசிக் அகாடமியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு, விருதுகள் பெறத் தகுதியானவர்கள் அறிவிக் கப்பட்டனர்.
சங்கீத கலாநிதி விருதுக்கு வாய்ப்பாட்டுக் கலைஞர் டாக்டர் எஸ்.செளம்யா தேர்வு செய் யப்பட்டுள்ளார். மேலும் இவர் இந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி முதல் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை நடை பெறவிருக்கும் அகாடமியின் 93-வது ஆண்டு மாநாட்டுக்கு தலைமை தாங்குவார்.
கர்னாடக இசையில் அறி வார்ந்த அணுகுமுறைக்கு பெயர் பெற்ற டாக்டர் எஸ். செளம்யா, சங்கீத கலாநிதி டாக்டர் எஸ்.ராம நாதன் மற்றும் சங்கீத கலாச்சார்யா டி.முக்தா இருவரிடம் இசைப்பாடம் பயின்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இசைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், மியூசிக் அகாடமியின் இசைப் பள்ளியில் இசை ஆசிரியராக உள்ளார். மேலும் தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தில் கல்விக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
சங்கீத கலாச்சார்யா விருதுக்கு வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் சீதா நாராயணன், எம்.எஸ்.ஷீலா தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.
இசைக்கலைஞர் விருது
நாகஸ்வர வித்வான் வியாசர் பாடி கோதண்டராமன் மற்றும் பாடகர் ராஜ்குமார் பாரதி ஆகியோர் டிடிகே விருதுகளையும், டாக்டர் ஆர்த்தி என்.ராவ் ‘இசைக்கலைஞர்’ விருதையும் பெறுவார்கள்.
அனைத்து விருதுகளும் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மியூசிக் அகாடமியின் சதஸின்போது வழங் கப்படும்.
2020-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் நடன விழாவின் தொடக்க விழாவில், நடனத்துக்கான நிருத்ய கலாநிதி விருது பிரியதர்ஷினி கோவிந் துக்கு வழங்கப்படும்.
கலாஷேத்ரா இயக்குநர்
எஸ்.கே.ராஜரத்தினம் பிள்ளை மற்றும் கலாநிதி நாராயணனிடம் நடனம் பயின்ற பிரியதர்ஷினி கோவிந்த், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். கலாஷேத்ரா நடனப்பள்ளியின் இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக் கது.சங்கீத கலாச்சார்யா விருதுக்கு வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் சீதா நாராயணன், எம்.எஸ்.ஷீலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.