தமிழகம்

குறிஞ்சி நிலமாக விளங்கும் காட்டுக்கோட்டை; விவசாயம் வளர்ச்சியடைய வேளாண் கல்லூரி அமைக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

எஸ்.விஜயகுமார்

சேலம்

சேலம் மாவட்டம் மலைகள் பலவற்றை தன்னகத்தே கொண்ட மாவட்டம். ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை கிராமத்தில் உள்ள மலையும் அதன் உச்சியில் முருகப்பெருமானின் கோயிலும் இருப்பது, இதனை குறிஞ்சி நிலமாக அடையாளப்படுத்துகிறது.

காட்டுக்கோட்டை கிராமத்தின் வடக்கே கல்வராயன் மலை, வசிஷ்ட நதி, தெற்கே வட சென்னிமலை குன்று இயற்கை அரண் கொண்டிருப்பதால், இங்கு விவசாயம் பிரதானமாக உள்ளது. காய்கறிகள், மரவள்ளிக் கிழங்கு, பருத்தி, சோளம் ஆகியவற்றை பரவலாக பயிரிட்டு வருகின்றனர். வசிஷ்ட நதிக்கரையோரம் நெடுக, தென்னை, வாழை மரங்களும் பயிரிடப்படுகின்றன. கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்குகளை வாங்கி விற்பனைச் செய்யக்கூடிய கமிஷன் மண்டிகள் காட்டுக்கோட்டை கிராமத்தில் அதிகம் உள்ளன. எனவே, மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் காட்டுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் ஏராளமாக உள்ளன.

சேலம்- சென்னை 4 வழிச்சாலை யோரம் அமைந்துள்ளதால், காட்டுக்கோட்டையில் இருந்து எந்நேரமும் சென்னை, சேலம் உள்பட பெருநகரங்களுக்கு போக்குவரத்து வசதி மிகுதியாக உள்ளது. வட சென்னிமலையை ஒட்டி சேலம்- விருத்தாசலம் அகல ரயில்பாதையும் இருக்கிறது.

சேலம் மாவட்டத்தின் பழநி என போற்றப்படும் வட சென்னிமலை  பாலசுப்ரமணியர் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலின் முக்கிய உற்ஸவமான பங்குனி உத்திரத் திருவிழா நாட்களில் பக்தர்கள் லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

வட சென்னிமலை அடிவாரத்தி லேயே இயற்கை எழில் கொஞ்சம் இடத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி, சேலம் மாவட்டம் மட்டுமல்லாது விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் என அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் கல்விக் கொடையளிக்கும் கல்விச் சாலையாக இருந்து வருகிறது.

இக்கல்லூரியால் காட்டுக் கோட்டை மட்டுமல்லாது சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர் கள் பட்டதாரிகளாக வளர்ச்சியடைந் துள்ளனர். எனவே, விவசாயம் மற் றும் கல்வி ஆகியவற்றை ஒருங்கே கொண்ட கிராமமாக காட்டுக் கோட்டை சிறப்புற்று இருக்கிறது.

இந்நிலையில், உலக மயமாக்கல் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா வேகமாக முன் னேறிக் கொண்டுள்ள நிலையில், காட்டுக்கோட்டை கிராமமும் அதற்கு இணையாக வளர்ச்சி பெற வேண்டும் என்பது இந்த கிராம மக்களின் ஆவலாக இருக்கிறது.

வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து காட்டுக்கோட்டை கிராம மக்கள் கூறியதாவது:

எங்கள் கிராமம் மட்டுமல்ல அம்மம்பாளையம், ஆயர்பாடி, சாத்தப்பாடி, சம்பேரி, கோபாலபுரம் என சுற்று வட்டார கிராமங்களிலும் விவசாயமே பிரதான தொழில். எனினும், இத்தொழில் நவீன மாற்றங்கள் ஏதுமின்றி, பழமையான தொழில்நுட்பத்துடனே இருக்கிறது.

குறிப்பாக, ஆத்தூர், தலை வாசல், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுமே விவ சாயப் பொருளாதாரத்தைக் கொண்டவை.

எனவே, இயற்கை சூழல், போக்குவரத்து வசதி, மக்களுக் கான தேவை ஆகியவற்றின் அடிப்படையில் காட்டுக்கோட்டை கிராமத்தில் அரசு சார்பில் வேளாண்மை கல்லூரி ஒன்றினை அமைக்க வேண்டும்.

இங்கு கல்லூரி அமைப்பதன் மூலமாக, விவசாயத்தை பிரதான மாகக் கொண்ட அண்டை மாவட்டங் களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் வேளாண்மை கல்வியைப் பெறு வதற்கு வாய்ப்பாக அமையும். காட்டுக்கோட்டை கிராமத்தில் இருந்த வடசென்னிமலை ரயில் நிறுத்தத்தையும் மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT