தமிழகம்

பேட்டரி வாகனங்களை அதிகரிப்பதற்கு சாலை வரியை குறைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை  

பேட்டரி வாகனங்களை ஊக்குவிக் கும் வகையில் இந்த வகை வாகனங்களுக்கான சாலை வரியை குறைக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களை குறைத்து, பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான புதிய திட்டங்களை வகுத்து படிப்படியாக நடைமுறைப்படுத்த உள்ளது. தேசிய மின் போக்குவரத்து திட்டத்தின்படி, அடுத்த 4 ஆண்டு களில் 70 லட்சம் பேட்டரி வாகனங்களை இயக்கும் வகை யில் இலக்கு நிர்ணயித்து செயல் பட்டு வருகிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், அகமதா பாத், சூரத், பூனே போன்ற நகரங் களிலும், இந்த நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை களிலும் பொதுத்துறை மற்றும் தனியாருடன் இணைந்து சார்ஜர் மையம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பேட்டரி வாகனங் களுக்கான சாலை வரியை குறைக்க வேண்டுமென மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாநில போக்குவரத்து ஆணையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஆணை யரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பேட்டரி வாகனங்களின் பயன் பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளை மத்திய அரசு அறி வுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே, பேட்டரி வாகனங்களுக்கான சாலை வரியை குறைக்க வேண்டும், பச்சை நிறத்தில் நம்பர் பிளேட்டுகள் வழங்க வேண்டும். 16 வயது முதல் 18 வயதினருக்கு பேட்டரி வாகனங்களை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

மேலும், பேருந்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால்டாக்சி போன்ற போக்குவரத்து வாகன வகைகளில் பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

இதற்காக பேட்டரி சார்ஜ் மையங்கள் அமைப்பது, தனியாக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்துவது போன்ற கட்ட மைப்புகளை மேம்படுத்த வேண்டு மென மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT