தமிழகம்

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.3.26 லட்சம் கோடி: இந்திய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை

தமிழகத்தின் மொத்த கடன் 2017-18 நிதியாண்டில் ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடி யாக உயர்ந்திருப்பதாக இந்திய தணிக்கை துறை தலைவரின் தணிக்கை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நேற்று வைக்கப்பட்ட, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத் தலை வரின் 2017-18 ஆண்டு நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் மொத்த வருவாய் 2017-18 நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 279 கோடியாக இருந்தது. அதில் வரி வருவாய் ரூ.93 ஆயிரத்து 737 கோடியாகும். வருவாய் செல வினம் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 873 கோடியாக இருந்தது.

15.22 சதவீதம் அதிகரிப்பு

மேலும் 2016-17 ஆண்டு முடிவில், ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 394 கோடியாக இருந்த கடன், 2017-18 ஆண்டு முடிவில் ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடியாக, அதாவது 15.22 சதவீதம் அதிகரித்துள்ளது.

வருவாய் செலவினங்களில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி 2016-17 நிதியாண்டில் ரூ.11 ஆயிரத்து 216 கோடியாக (7.32 சதவீதம்) இருந்தது. இது கடந்த ஆண்டு ரூ.8 ஆயிரத்து 911 கோடியாக (5.31 சதவீதம்) குறைந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால், 14-வது நிதிக்குழு ஆணைய பரிந்துரை களின்படி மத்திய அரசிடம் இருந்து ஊராட்சி அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான அடிப்படை மானியங் கள் ரூ.1,573 கோடியை பெற முடியாததால்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி குறைந்துள்ளது.

முறைப்படுத்தவில்லை

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 205-ன் கீழ் மிகை செலவினம் முறைப்படுத்தப்பட வேண்டும். 2012-17 வரையிலான ஆண்டுகளுக்கு தொடர்புடைய மிகைச் செலவினமான ரூ.1,099 கோடியே 58 லட்சம் சட்டப்பேரவை யில் முறைப்படுத்தப்படவில்லை.

கல்வித்துறையில்..

அனைவருக்கும் கல்வி திட்டம், இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டம் போன்றவற்றின் கீழ் திட்டங் களை நடைமுறைப்படுத்த ரூ.1,627 கோடி நிதி உபயோகப்படுத்தப் படாமல் திருப்பி ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இதேபோன்று நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், ஒப்பந்தப்புள்ளிகள் முடிக் கப்படாததன் காரணமாக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் துறையில் ரூ.1,022 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி உதவி யுடன் காவிரி பாசனப் பகுதியில் தட்பவெப்பநிலை மாறுதலால் ஏற்படும் தாக்குதலை மட்டுப்படுத் தும் திட்டம், தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மை திட்டம், நீர்ப்பாசன கட்டமைப்புகளை புதுப் பித்தல் திட்டம், நீர்வள மேலாண்மை குழு குடிமராமத்து மற்றும் மறு சீரமைப்பு பணிகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகம் சார்பில் அணை களை புனரமைத்தல் திட்டங்கள் உள்ளிட்டவற்றை நடைமுறைப் படுத்த நிதி உபயோகப்படுத் தாததால் ரூ.1,729 கோடி திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய மூலதன நிதியின் கீழ் கடலோர பேரிடர் துயர் தணிப்பு திட்டத்தின் மூலம் புயலால் பாதிக்கப்படாத மின் இணைப்பு அமைத்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதிகள் உபயோகப்படுத்தாததால் ரூ.1493 கோடி நிதியை ஒப்படைக்க நேரிட்டது.

முடிவுறா திட்டங்களில் முடக் கப்பட்ட நிதிகள், செலவினத்தின் தரத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முடிவுறாத 134 திட்டங்கள்

2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி உள்ளவாறு, அரசால் ரூ.1,276 கோடியே 27 லட்சம் முதலீடு செய்யப்பட்ட சாலைகள், பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான 134 திட்டங்கள், அவற்றின் திட்டமிட்ட நிறைவு தேதிக்குப் பிறகும் முடிவுறாமல் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.

நலத்திட்ட செலவினம் குறைந்தது

2015-16 நிதியாண்டில் ரூ.6 ஆயிரத்து 156 கோடியாக இருந்த திருமண உதவி திட்டம், மகப்பேறு உதவித் திட்டம், இலவச மடிக் கணினி மற்றும் சீருடை வழங்குதல் போன்ற இலவச திட்டங்களின் மதிப்பு கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.4 ஆயிரத்து 433 கோடியாக குறைந்தது.

இவ்வாறு தணிக்கை அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT