தமிழகம்

அரசு நிகழ்ச்சிகளுக்கு எம்எல்ஏக்களை கண்டிப்பாக அழைக்க வேண்டும்: பேரவைத் தலைவர் தனபால் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின், “கன்னியாகுமரியில் நடை பெற்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆஸ்டின் அழைக் கப்படவில்லை. அதுபோல பல மாவட்டங்களில் திமுக உறுப்பினர் களை அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை. அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டங்க ளுக்கு அத்தொகுதியின் உறுப் பினர் அழைக்கப்படவில்லை.

எனவே, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட சட்டப்பேரவை உறுப் பினர்களை அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டும்” என்றார்.

அவருக்கு பதிலளித்த பேர வைத் தலைவர் பி.தனபால், “தமிழக அரசு நிகழ்ச்சிகளுக்கு எம்எல்ஏக்களை கண்டிப்பாக அழைக்க வேண்டும் என ஏற் கெனவே அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். கன்னியாகுமரி தொகுதி உறுப் பினர் ஆஸ்டின், உரிமை மீறல் பிரச்சினையாக இதனை கொடுத் துள்ளதால் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டுள்ளேன். அவரிடம் இருந்து பதில் வந்தால்தான் நான் பதிலளிக்க முடியும். மற்றபடி அரசு நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களை அதிகாரிகள் கண்டிப்பாக அழைக்க வேண்டும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அரசு நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப் பட்ட எம்.பி., எம்எல்ஏக்கள் அழைக் கப்படுகின்றனர். அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஒரு சில இடங்களில் அழைக்கப் படவில்லை என்றால், அதை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT