சென்னை
சட்டப்பேரவைக் கூட்ட அரங்கில், விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி யாரின் முழுஉருவப்படம் நேற்று திறக்கப்பட்டது. திராவிடக் கொள் கைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்ட அவர், பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடி யவர் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் புகழாரம் சூட்டினார்.
விடுதலைப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் செயல்பாடுகளை போற்றும் வகை யில், தமிழக சட்டப்பேரவைக் கூட்ட அரங்கில் அவரது உருவப்படம் நேற்று திறக்கப்பட்டது. பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், படத்தை முதல் வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
செல்வாக்கு பெற்ற தலைவர்
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரவைத் தலைவர் ப.தனபால் பேசும்போது, ‘‘ராமசாமி படை யாட்சியாரை அறியாத அரசியல் வாதிகளே தமிழகத்தில் இல்லை. திராவிடக் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். பிற்படுத் தப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவர். மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவரான அவர், 1954-ல் காமராஜரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பல்வேறு திட்டங்களை செயல்படுத் திக் காட்டினார். விவசாயக் குடும் பத்தை சேர்ந்த அவர் சாதி, மதத் துக்கு அப்பாற்பட்டு அனைவரிட மும் அன்பு செலுத்தினார்’’ என்றார்.
நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்றால், அந்த வளர்ச் சிக்கு உரமாக இருப்பது பல விடுதலைப் போராட்டத் தலைவர் களின் தியாகங்கள்தான். அப்படிப் பட்ட தியாக சீலர்களில் ஒருவ ராக திகழ்ந்தவர் ராமசாமி படை யாட்சியார்.
கடந்த 1952-ம் ஆண்டு தமிழ் நாடு உழைப்பாளர் கட்சியை தோற்றுவித்து, அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவர் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 19 வேட்பாளர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மக்களவை தேர்தலிலும் அக்கட்சியின் 4 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
அதன்பிறகு, 1954-ம் ஆண்டு காமராஜரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக ராமசாமி படையாட்சியார் பணி யாற்றினார். பின்னர், கடந்த 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் மக்க ளவை உறுப்பினராகவும் இருந் தார்.
மிகவும் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்க காரணமாக இருந்தார். வன்னியர் சமூகத்துக்கு மாநிலத்தில் 20 சதவீதம், மத்தியில் 2 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி வெற்றி பெறச் செய்தார்.
எனவே, அவர் பிறந்த நாளான செப்டம்பர் 16-ம் தேதி அரசு விழா வாக கொண்டாடப்படும் என்று அறி வித்தேன். மேலும், வன்னிய சமூகத் தினர், அமைச்சர்களின் கோரிக் கையை ஏற்று, கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 1.5 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கி, அதில் ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பில் ராமசாமி படையாட்சியாருக்கு நினைவு மண்டபம், சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபம் விரைவில் திறக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘வன்னிய சமூகத் தின் உயர்வுக்காக அயராது உழைத் தவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி யார். அரசியல் வாழ்வில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி சரித்திரம் படைத்தவர். ஆங்கிலேயர் காலத் தில் வன்னிய சமூகம், குற்றப் பரம்பரை என்ற பட்டியலில் வைக் கப்பட்டிருந்தது. அந்த நிலையை நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து, அதை நிறைவேற்றினால், நீங்கள் முதலமைச்சர் ஆவதற்கு என் ஆதரவு என்று சொல்லி, ராஜாஜிக்கு ஆதரவு அளித்தார். அதனால்தான், தமிழகத்தில் அன்று நிலையான ஆட்சி அமைந்தது’’ என்றார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், எதிர்க்கட்சித் தலை வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திண் டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங் கோட்டையன் உள்ளிட்ட அமைச் சர்கள், துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், வி.மைத்ரே யன், சந்திரசேகரன் உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணி தலைவர் அன்புமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, ராமசாமி படையாட்சியாரின் மகன் எஸ்எஸ்ஆர் ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
ராமசாமி படையாட்சியாரின் முழு உருவப் படத்தை வரைந்த ஓவியர் மதியழகனை முதல்வர் பழனிசாமி பாராட்டினார்.