தமிழகம்

கன்னியாகுமரி முதல் காரைக்குடி வரை 10 ஆண்டாக கிடப்பில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம்: மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததால் தென்மாவட்ட மக்கள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

இ.ஜெகநாதன்

சிவகங்கை

கன்னியாகுமரி முதல் காரைக்குடி வரையிலான கிழக்குக் கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததால் தென்மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூர் வழியாக மும்பை வரை 1,922 கி.மீ.க்கு மேற்கு கடற்கரை ரயில்பாதை உள்ளது. இந்த ரயில் பாதையால் கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் பயன்பெறுகின்றன.

மேற்குக் கடற்கரையில் உள்ள அனைத்துத் துறைமுகங்களையும் இந்த வழித்தடம் இணைப்பதால் சரக்குகள் எடுத்துச் செல்வதில் சிரமம் இல்லை. இதனால் இப்பகுதி கள் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ளன. இதுபோல் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும் ரயில் வழித்தடம் அமைக்க வேண்டுமென நீண்ட நாள் கோரிக்கையாக உள் ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம், நாங்குனேரி தொழில் நுட்பப் பூங்கா, மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க திட்ட மையம் மற்றும் தூத்துக்குடி, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து பெரும்பாலும் சாலை வழியாகவே சரக்குகள் கையாளப்படுகின்றன.

கிழக்குக் கடற்கரை ரயில் பாதை அமைந்தால் சரக்குப் போக்கு வரத்து அதிகரிப்பதோடு, புதிய தொழிற்சாலைகள், தொழில் நிறு வனங்கள் உருவாகவும் வாய்ப் புள்ளது. கிழக்குக் கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியில் தொடங்கி திருச்செந்தூர், தூத்துக் குடி, ராமநாதபுரம், காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், பாண்டிச்சேரி, மகாலிபுரம் வழியாக சென்னை வரை செல்கிறது.

இந்த வழித்தடத்தில் ஏற்கென வே கடலூரில் இருந்து காரைக்குடி வரை ரயில் பாதை உள்ளது. இதை யடுத்து சென்னையில் இருந்து மகா பலிபுரம், பாண்டிச்சேரி வழியாக கடலூர் வரை 178.28 கி.மீ.க்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என 2008-2009-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.523.52 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் திட்டம் செயல்படுத்தவில்லை.

அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூர், தூத் துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை புதிய ரயில் பாதைக்கு ஆய்வு நடத்தப்படும் என அதே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 248 கி.மீ.க்கு ரூ.1,080 கோடியில் ரயில் தடம் அமைக்கவும், காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை 34 ரயில் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு ரயில்வே துறையிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.

ஆனால், 10 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட் டிலும் நிதி ஒதுக்கீடு இல்லாததால் தென்மாவட்ட மக்கள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.

கிழக்குக் கடற்கரை ரயில்பாதை அமைத்து தென்மாவட்டங்களில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிடமணி கூறுகையில், கிழக்குக் கடற்கரை ரயில் பாதைக்கு இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. கேரளா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகள், ரயில்வேக்கு 50 சதவீத நிதி மற்றும் தேவையான நிலத்தை ஒதுக்குவதால் உடனுக்குடன் திட்டங்கள் நிறைவேறுகின்றன.

ஆனால், தமிழக அரசு கண்டுகொள்ளாததால் ரயில்வே திட்டங்களில் சுணக்கம் ஏற்படு கிறது. கிழக்குக் கடற்கரை ரயில் பாதை அமைக்க தமிழக அரசும் முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT