தமிழகம்

4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:

தமிழக பகுதியில் காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூலை 19) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதற்கு அடுத்த 3 நாட்களுக்கு, காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங் கலத்தில் 4 செமீ, பாண்டவையார், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தலா 3 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி, பெரிய அணைக் கட்டு, வல்லம், மதுக்கூர், புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT