சென்னை
யுபிஎஸ்சி உட்பட பல்வேறு போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் வகை யில் சென்னை, கோவை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளில் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி தெரிவித் துள்ளார்.
சட்டப்பேரவையில் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் வளர்மதி நேற்று பதில் அளித்தார்.
அதைத் தொடர்ந்து அவர் வெளி யிட்ட அறிவிப்புகள்:
1,074 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளுக்கு மாவு அரைக்கும் இயந்திரங்கள், 1,258 விடுதிகளுக்கு சமையல் பாத்திரங்கள் ரூ.6 கோடியே 64 லட்சத்து 30 ஆயிரத்தில் வழங்கப்படும், விடுதிகளில் சிறப்பு பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.5 கோடி வழங்கப்படும். கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனி திறன்பயிற்சி, ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி வழங்கப்படும். 15 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 6-ம் வகுப்பில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்படும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட 39 தனியார் விடுதிகளில் தங்குவ தற்கு அனுமதிக்கப்படும் மாணவர் களின் பெற்றோர்களது ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். மாநில அளவில் விடுதிகளை நன்றாகப் பராமரிக்கும் விடுதி பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் சென்னை, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தஞ் சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 11 மாநக ராட்சிகளில் யுபிஎஸ்சி, டிஎன்பி எஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் வகை யில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்துக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2 கோடியே 50 லட்சமாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட 17 அறிவிப்புகளை வெளியிட்டார்.