ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புறநோயாளிகள் பிரிவை 2 மணிநேரம் புறக்கணித்த அரசு மருத்துவர்கள்: சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதி

செய்திப்பிரிவு

சென்னை 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத் துவமனைகளில் நேற்று 2 மணி நேரம் புறநோயாளிகள் பிரிவை மருத்துவர்கள் புறக்கணித்ததால் நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் டாக்டர் களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்கிட வேண் டும். எம்சிஐ விதிப்படி மருத்துவர் களின் எண்ணிக்கையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குறைக்கக்கூடாது.

நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும். முது நிலை மருத்துவப் படிப்பை முடித் துள்ள அரசு மருத்துவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக மக்களின் நலன் கருதி மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி அரசு மருத் துவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். ஆனால், கோரிக்கை களை நிறைவேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்நிலையில் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அரசு மருத்துவர்கள் ஒன்றாக இணைந்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டமைப்பைத் தொடங்கி தொடர் போராட்டங்களை அறிவித்தனர்.

இந்தக் கூட்டமைப்பில் ஜன நாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற் றும் பட்டமேற்படிப்பு மருத்துவர் கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இடம்பெற்றன.

கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அடை யாள உண்ணாவிரதம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் கடந்த 15-ம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட் டத்தைத் தொடங்கினர். மறுநாள் 16-ம் தேதி தமிழக சட்டப்பேர வையில் நடைபெற்ற சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில், கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்த எந்த அறிவிப்பும் இடம் பெறாததால் அரசு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத் துவமனைகளில் நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை புற நோயாளிகள் பிரிவைப் புறக் கணித்த அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புறநோயாளிகள் பிரிவு செயல் படாததால் ஏழை நோயாளிகள் குறித்த நேரத்தில் சிகிச்சைப் பெற முடியாமல் அவதிப்பட்டனர். காலை 10 மணிக்குப் பின்னர், புறநோயாளிகள் பிரிவில் நோயாளி களின் கூட்டம் அலைமோதியது. மேலும் போராட்டத்தை தீவிரப் படுத்த அரசு டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

எந்த நடவடிக்கையும் இல்லை

இதுதொடர்பாக அரசு மருத் துவர்கள் கூறும்போது, ‘‘இந்தியா விலேயே தமிழகத்தில்தான் அரசு டாக்டர்கள் குறைவான ஊதியம் பெறுகின்றனர். தமிழக சுகாதாரத் துறை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் பெருமையாகக் கூறுகின்றனர். ஆனால், அதற்குக் காரணமாக விளங்கும் அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்" என்றனர்.தமிழக சுகாதாரத் துறை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் பெருமையாகக் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT