- ஜாய்சன்
ஸ்ரீவைகுண்டம் அருகே பாலத்தில் மோதி வேன் விபத்துக்குள்ளானது. இதில் திருத்தங்கலை சேர்ந்த 6 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்தவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். 18 பேர் கொண்ட குடும்பத்தினர் வேனில் சென்றனர். அவர்கள் சென்ற வேன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே
கருங்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, வேன் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 1 வயது குழந்தை 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள். 12 பேர் பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியானவர்கள் பெயர் ஜெகதீஸ்வரன், அருணாசலம், முத்துலட்சுமி , பாக்கியலட்சுமி , நித்தீஷ், அனீஸ்பாண்டி (குழந்தை).
விபத்தில் காயமடைந்தவர்கள் பெயர் விபரம்:-
விஷ்ணு, செந்தில்குமார், சூர்யபிரபா, மாரீஸ்வரி, கௌசல்யா, மல்லிகா, முகிலன், சுகுமாரன், ஸ்வேதா, முருகேசன், செண்பா, முருகன் (டிரைவர்) ஆகிய 12 பேர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் விபத்து நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கோபாலன் நேரில் பார்வையிட்டார். இது குறித்து செய்துங்கநல்லுர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.