இரா.ஜெயபிரகாஷ்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் 6 மணி நேரம் காத்திருந்து நெரிசலில் சிக்கி தரிசனம் செய்துவரும் நிலை யில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியும் அவரது சகாக்களும் முக் கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் சென்று சகல மரியாதையுடன் தரி சனம் செய்த சம்பவம் பெரும் பர பரப்பையும் பக்தர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அங்கு தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த மக்கள், தற்போது 6 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
சாதாரண பொதுமக்கள் கடும் வெயிலில் காத்திருந்து அத்திவர தரை தரிசிக்கும் சூழ்நிலையில் ரவுடி ஒருவர் சகல மரியாதை யுடன் கோயிலுக்குள் சென்று அத்திவரதரை தரிசித்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம். இவர் கடந்த ஜூலை 11-ம் தேதி அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்துள்ளார். அப்போது அவரை அங்கிருந்த காவலர்கள் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவுவாயில் வழியாக அனுமதித்துள்ளனர். தனது சகாக் களுடன் வசந்த மண்டபத்துக்குச் சென்ற செல்வத்தை முக்கிய பிர முகர்களை அமர வைப்பதுபோல் அங்குள்ள பட்டாச்சாரியார்கள் அத்திவரதர் முன் அமரவைத்து அவருக்கு சிறப்பு மரியாதை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங் களில் பரவி வருகின்றன.
இதுகுறித்து பெங்களூரைச் சேர்ந்த சிவா என்பவர் கூறும் போது, “6 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்துள்ளேன். இங்கு போதிய வசதி இல்லை. மாவட்ட நிர்வாகம் கூடுதல் வசதிகளை செய்திருக்க வேண்டும். பெரும் செல்வந்தர் களும், ரவுடிகளும் எளிதாக அத்தி வரதரை தரிசிக்கின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
வடகலை சபைத் தலைவர் டி.சி.சீனுவாசன் கூறும்போது, “ரவுடி வரிச்சியூர் செல்வம் கோயிலுக்கு வந்ததை குறைகூற முடியாது. ஆனால் விஐபி அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தால் மாவட்ட நிர்வாகமும், அனுமதிச் சீட்டு இல்லாமல் உள்ளே வந்திருந்தால் காவல் துறையும் இது எப்படி நடந்தது என்பதை விளக்க வேண்டும். பட்டாச்சாரியார்கள் ரவுடியை அத்திவரதர் முன் அமரவைத்து அவருக்கு மரியாதை செய்ததும் ஏற்க முடியாது. சிலர் விஐபி அனுமதிச் சீட்டை போலியாக தயாரித்து வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் ஆட்சியர் நடத்திய ஆய்வின்போது போலி அனுமதி அட்டையுடன் சிலரை உள்ளே அழைத்து வந்தவர் சிக்கினார். ஆனால், அவர் மீது போலீஸார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் பணி செய்யும் ஒரு முக்கிய நபரே இந்த அடையாள அட்டையை வழங்கி யது தெரியவந்ததால் அதை அப் படியே விட்டுவிட்டனர்” என்றார்.
காவல் துறையினர், இந்து சமய அறநிலையத் துறையினர் முறைகேடாக பலரை அனுமதி அட்டை இல்லாமல் அனுமதித்து வருகின்றனர். இதுபோல நடக்கா மல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் விசாரணை
மாவட்ட ஆட்சியர் பா.பொன் னையாவிடம் கேட்டபோது, “இது தொடர்பான வீடியோக்கள் என் கவனத்துக்கும் வந்தன. வரிச்சியூர் செல்வத்தை அழைத்து வந்தது யார் என்பதை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். அவரை திமுக பிரமுகர் கள் அழைத்து வந்துள்ளனர். வரிச்சி யூர் செல்வம் உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் வந்துள்ளார். காவல் துறையினர் எப்படி அவரை அனுமதித்தனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.