தமிழகம்

உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் வேலுமணி விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை

உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இருப்ப தாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய எதிர்க்கட்சித் தலை வர் மு.க.ஸ்டாலின், “நாடாளு மன்ற மக்களவையில் நேற்று (ஜூலை 16) திமுக உறுப்பினர் ஆ.ராசா எழுப்பிய கேள்விக் குப் பதிலளித்த மத்திய பஞ் சாயத்துராஜ் துறை அமைச் சர் நரேந்திரசிங் தோமர், “உள்ளாட்சித் தேர்தல் நடத் தப்படாததால் 2016-17-ம் நிதியாண்டில் இருந்து தமிழ கத்துக்கு வழங்க வேண்டிய செயலாக்க மானியம் வழங் கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 24-10-2016க்குள் தேர்தல் நடைபெற்று இருக்க வேண் டும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத் தப்படவில்லை. இதனால் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற் பட்டுள்ளது.

எனவே, இனியும் தாம தம் செய்யாமல் உள்ளாட் சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு முன் வருமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த உள் ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “கடந்த 2016 அக்டோபரில் உள்ளாட் சித் தேர்தலை நடத்த அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், நீதிமன்ற வழக்கு காரணமாக தேர்தல் நடை பெறவில்லை.

22 ஆண்டுகளாக உள் ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்படவில்லை. இந்த மிகப்பெரிய பணி தற்போது முடிக்கப்பட்டுள்ளது.

எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடத்த அதிமுக அரசு தயாராகவே உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடை பெறாத போதும் தமிழகத் துக்கான நிதியை வழங் கக்கோரி பிரதமர் மோடி யிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.

மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சர் நரேந்திரசிங் தோமரை நானும் சந்தித்து வலியுறுத்தினேன். அரசின் இதுபோன்ற முயற்சிகளால் நிதியை பெற்று வருகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT