தமிழகம்

அண்ணா பல்கலை. துறை கல்லூரிகளில் கல்விக் கட்டணம் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை

அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டு முதல் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல் லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி ஆகியவை துறைக் கல்லூரிகளாக செயல்படுகின்றன.

கடந்த 19 ஆண்டுகளாக..

இக்கல்லூரிகளில் கடந்த 19 ஆண்டுகளாக வருடாந்திர கல்விக் கட்டணம் மாற்றப்படாமல் இருந்து வந்தது. தற்போது செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் கட் டணத்தை மாற்றி அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து புதிய கட் டணத்தை நிர்ணயித்து அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியது. அதில் உயர்கல்வித் துறை சீர் திருத்தங்களை மேற்கொண்டது. அதன்பிறகு திருத்தப்பட்ட புதிய கட்டணத்துக்கு சிண்டிகேட் கூட்டமும் ஒப்புதல் வழங்கி யதைத் தொடர்ந்து, மேற்குறிப் பிட்ட 3 துறை கல்லூரிகளுக்கான புதிய வருடாந்திர கல்விக் கட் டணத்தை அண்ணா பல்கலைக் கழகம் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட்டுள்ளது.

அதன்படி, கிண்டி பொறியியல் கல்லூரியில் பிஇ, பிடெக் படிப்புக்கு கல்விக் கட்டணம் தமிழக மாணவர்களுக்கு ரூ.33,560 ஆகவும், வெளிமாநில மாணவர் களுக்கு ரூ.34,060 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி யில் பிடெக் படிப்புக்கு தமிழக மாணவர்களுக்கு ரூ.32,160 ஆகவும் வெளி மாநிலத்தினருக்கு ரூ.32,660 ஆகவும், அதேபோல், எம்ஐடியில் பிடெக் படிப்புக்கு தமிழக மாணவர்களுக்கு ரூ.32,160 ஆகவும், வெளிமாநில மாணவர் களுக்கு ரூ.35,160 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நூலக, ஆய்வகக் கட்டணம்

இந்தக் கட்டணத்தில் மாணவர் சேர்க்கைக் கட்டணம், டியூஷன் கட்டணம், செமஸ்டர் கட்டணம், கம்ப்யூட்டர், நூலகம், ஆய்வகக் கட்டணங்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட கட்டணங்கள் அடங்கும். இக்கட்டண விவரங்களை கல்லூரி கள் வாரியாக அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT