தமிழகம்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

செய்திப்பிரிவு

ஊதிய உயர்வு உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் சார் பில் சென்னையில் நேற்று நடை பெற்ற 4-வது முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வி யடைந்தது. இதையடுத்து, மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடை பெறுகிறது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) 12 ஆயி ரத்து 300 தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். நிரந்தர தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய மாற்று ஒப்பந்தம் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடி வடைந்தது. இதையடுத்து, 2012 ஜனவரி முதல் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் செய்யக்கோரி தொழிற்சங்கங்கள் என்.எல்.சி. நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்தன. இதில் உடன்பாடு ஏற்படாமல் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, என்.எல்.சி., நிரந்தர தொழிலாளர்கள் கடந்த 20-ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண் பதற்காக மத்திய அரசு மண்டல தொழிலாளர் ஆணையர் கே.சேகர் முன்னிலையில் கடந்த வாரம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படா மல் பேச்சுவார்த்தை தோல்வி யடைந்தது. மேலும், மின்னுற்பத்தி யும் பாதிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய அரசு மண்டல தொழிலாளர் ஆணையர் கே.சேகர் முன்னிலையில் நேற்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சாஸ்திரி பவனில் உள்ள மண்டல தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், என்.எல்.சி. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதன் தலைவர் அபு, செய லாளர் ராம உதயகுமார், பொரு ளாளர் மோகனசுந்தரம் மற்றும் என்.எல்.சி. தொ.மு.ச. சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் சா.ராசவன்னியன், பொருளாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் தலைமை பொது மேலாளர் உமா மகேஸ்வரன், பொது மேலாளர் (மனித வளம்) தியாகராஜு, செயல் இயக்குநர் முத்து ஆகியோர் பங்கேற்றனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மதியம் 1 மணி வரை நீடித்தது. பேச்சுவார்த்தைக் குறித்து தொ.மு.ச. பொதுச் செயலாளர் சா.ராசவன்னியன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

என்.எல்.சி. ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினைக் குறித்து கடந்த 42 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்று (நேற்று) 4-வது சுற்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. நாங்கள் 24 சதவீத ஊதிய உயர்வு கோரி வருகிறோம். ஆனால், நிர்வாக தரப்பில் 10 சதவீதம் ஊதிய உயர்வு மட்டுமே அளிக்க முடியும் என கூறுகின்றனர்.

இதைத் தவிர, இறந்த தொழி லாளர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு, இன்கோசர்வ் தொழிலாளர்கள் இரண்டாயிரம் பேரை பணி நிரந்தரம் செய்தல் மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண் டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கை களையும் பேச்சுவார்த்தையின் போது முன்வைத்தோம். ஆனால், இக்கோரிக்கைகள் குறித்து நிர் வாகம் தரப்பில் எவ்வித உடன் பாட்டுக்கும் வரவில்லை.

இதையடுத்து, மண்டல தொழி லாளர் ஆணையர் நாளை (இன்று) மீண்டும் என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியுள்ளார். பின்னர், எங்களிடம் மீண்டும் புதன்கிழமை (நாளை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தற்போது ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்னுற் பத்தி குறைந்துள்ளது. இது படிப்படியாக மேலும் குறை யும். வேலை நிறுத்தப் போராட் டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு சா.ராசவன்னியன் கூறினார்.

இன்று மனித சங்கிலி

இதனிடையே என்எல்சியில் அங்கீகரிக்கப்படாத தொழிற்சங் களான சிஐடியு, பாட்டாளி தொழிற்சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி உட்பட 10 தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக இன்று (28-ம் தேதி) மாலை 5 மணிக்கு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள் வார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT