மறைந்த முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியாரின் உருவப் படம், தமிழக சட்டப்பேர வையில் வரும் 19-ம் தேதி திறந்து வைக்கப்படும் என பேர வைத் தலைவர் பி.தனபால் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட பேரவைத் தலைவர் பி.தனபால், “மறைந்த முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியாரின் உருவப் படத்தை சட்டப்பேரவை யில் வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.
பேரவைத் தலைவர் தலைமையில் துணை முதல்வர் முன்னிலையில் நடை பெறும் இந்த விழாவில் எதிர்க் கட்சித் தலைவர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்’’ என்றார்.