கோப்புப் படம் 
தமிழகம்

கழிவுநீர் தொட்டிக்கு குழி தோண்டியபோது மண் சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கிழக்கு கடற்கரை சாலை, பெரிய நீலாங் கரையில் கழிவுநீர் தொட்டிக்கு குழி தோண்டும்போது மண் சரிவில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை யில் நீலாங்கரை அருகே பெரிய நீலாங் கரை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

8 அடி ஆழத்துக்கு குழி

இங்கு கழிவுநீர் தொட்டி அமைப்ப தற்காக குழி தோண்டும் பணி நேற்று நடந்தது. அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, முருகன், ஏழுமலை, ரமேஷ் ஆகிய 4 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். 8 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டிருந்த நிலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு, 4 பேரும் குழிக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதில் அண்ணாமலை, முருகன் ஆகியோர் குழிக்குள் இருந்து வெளியே வந்துவிட்டனர். ஆனால், ஏழுமலை, ரமேஷ் இருவர் மீதும் மண் அதிக அளவில் விழுந்ததால் அவர்களால் மீள முடியவில்லை.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் நீலாங்கரை போலீஸார் மற்றும் திருவான்மியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மாவட்ட தீயணைப்பு அதிகாரி சையது அகமது நேரில் வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். குழிக்குள் சிக்கியிருந்த ஏழுமலையை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ரமேஷ் ஆழத்தில் சிக்கிவிட்டதால் அவரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

தீவிர முயற்சிக்குப் பிறகு, அவரை யும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து நீலாங் கரை போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT