திருத்தணி
திருத்தணி அருகே சந்தான வேணுகோபாலபுரம் கிராமத் தில் உள்ள சின்ன ஏரியில் நோபல் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் தூர்வாரும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
அப்பணியை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ஆகி யோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அரக்கோணம் எம்பி அரி, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன், நோபல் பவுண்டேஷன் தலை
வர் கலைமாமணி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
இதில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது: தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம், இயற்கையை மதிக்காமல், அதன்வளத்தை அழிப்பதுதான். நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, கல்லூரிகளாகவும் வீட்டுமனைகளாகவும் மாறி உள்ளதால், நிலத்துக்கு அடியில் நீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறையினர் தண்ணீரை பார்ப்பது அரிதாகிவிடும். நாம் நிலத்தடி நீரை பாதுகாக்க ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.
ஆட்சியர் மகேஸ்வரி பேசும்போது, “மழை நீரை சேகரிக்கும் பணியில் நாம் ஈடுபட்டு, நிலத்தடி நீர் உயர்ந்தால்தான் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்” என்றார்.
நோபல் பவுண்டேஷன் தலைவர் கலைமாமணி கூறும்போது, “எங்கள் தொண்டு நிறுவனம் சார்பில், திருவள் ளூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி சீர
மைக்க உள்ளோம்.
மேலும், பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபடும்போது, எங்களை தொடர்பு கொண்டு, கட்டணமின்றி பொக்லைன், டிராக்டர் ஆகியவற்றை பயன்
படுத்திக் கொள்ளலாம்” என்றார்.