அன்சருல்லா அமைப்பில் தொடர்பு இருப்பதாக சவுதி அரசால் வெளியேற்றப்பட்ட 14 பேரையும் டெல்லியில் என்.ஐ.ஏ கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது.
வெளிநாடுகளில் இயங்கு சட்டவிரோத அமைப்பான அன்சருல்லா அமைப்புடன் இணைந்து தமிழகத்தில் அந்த அமைப்பை துவக்கியதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கடந்த சனிக்கிழமை காலை சென்னை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 4 இடங்களில் என்.ஐ,ஏ அமைப்பு திடீர் சோதனை நடத்தியது.
இதில் நாகையில் சிக்கிய 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள், செல்போன், பென் டிரை, லாப்டாப் உள்ளிட்ட பல ஆவணங்களை கைப்பற்றினர்.
சென்னையில் பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தியப்பின் அனுப்பி வைத்தனர். இதனிடையே டெல்லியில் பிடிபட்ட 14 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்த என்.ஐ,ஏ அதிகாரிகள் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் 120B, 121A and 122 of IPC besides sections 17, 18, 18-B, 38 and 39 of the UA (P) Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
பூந்தமல்லை சிறப்பு நீதிமன்ற நடுவர் செந்தூர்ப்பாண்டியன் 14 பேரையும் ஜூலை 25 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதன்பேரில் அவர்களை சிறையில் அடைத்தனர்.
பின்னணி:
ஐக்கிய அரபு எமிரேட்டின் பாதுகாப்பு துறையினர் அங்கு சட்டவிரோதமாக இயங்கும் அன்சருல்லா என்கிற அமைப்பின் மூலம் இந்தியாவில் அமைப்பை தொடங்கி சதிச்செயலில் ஈடுபட தமிழகத்திலிருந்து பணிக்குச் சென்ற தொழிலாளர்களை வைத்து அமைப்பு ஆரம்பிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் சவுதி அரசு நடத்திய விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை பிடித்து 2 மாதங்களாக விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் அவர்கள் அன்சருல்லா அமைப்பை தொடங்கும் பணியில் ஈடுபட்டிருந்ததை அறிந்து அவர்களை சௌதியில் இருந்து வெளியேற்றி டெல்லி அனுப்பியது.
என்.ஐ,ஏ அமைப்புக்கு தகவல் அளித்ததன்பேரில் 14 பேரையும் டெல்லியில் என்.ஐ.ஏ பிடித்து விசாரணை நடத்தியது. அவர்கள் அளித்த தகவலின்பேரில் நாகை, சென்னையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் நாகையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி தலைமறைவாகிவிட்டார்.
டெல்லியில் பிடிபட்ட 14 பேரையும் டிரான்சிட் வாரண்ட் அடிப்படையில் சென்னை அழைத்துவந்து இன்று சிறையில் அடைத்தனர். கைதான 14 பேர் விபரம் வருமாறு:
1. முகம்மது ஷேக் மொஹ்தீன் - மதுரை
2. முகம்மது அசாருதீன் - திருவாரூர்
3. ராஃபிக் அகமது - சென்னை
4. முகமது அக்சர் - தேனி
5. மொய்தீன் சீனி ஷாகுல் ஹமீது - கீழக்கரை
6. முகமது இப்ராஹிம் - நாகப்பட்டினம்
7. மீரான் கனி - தேனி
8. குலாம் நபி ஆசாத் - பெரம்பலூர்
9 . ரஃபி அகமது - ராமநாதபுரம்.
10. முன்தாப்சீர் - ராமநாதபுரம்.
11. உமர் பாஃரூக் - தஞ்சை
12. பாஃரூக் - அருப்புக்கோட்டை.
13. பைசல் ஷெரிஃப் - ராமநாதபுரம்
14. முகமது இப்ராஹிம் - திருநெல்வேலி.