முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மக்களுக்கு தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டப் பிரதிநிதிகள் மாநாடு வயலூரில் நேற்று நடைபெற் றது. இதில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய தாவது:
திருச்சியில் வரும் 23-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். தமிழ கம் முழுவதும் இருந்து தொண் டர்கள் வர இருக்கின்றனர். அதிமுக அரசு தாழ்த்தப்பட்ட வர்களுக்கு எதிராக செயல்படும் அரசு என்பதை தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணைய தலைவரே இரு தினங்களுக்கு முன் தெரி வித்துவிட்டார். தமிழகத்தில் கவுரவக் கொலைகள் அதிகளவில் நடைபெற்று வருவதாகவும் குற்றச் சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதை யெல்லாம் கருத்தில்கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும்.
முதல்வர் என்பவர் கட்சிகளுக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு எல் லோருக்கும் பொதுவானவர். அவரது உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. எனவே, உண்மை நிலையை தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும்.
மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக வாய்ப்புள்ளதா என் பது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. சட்டமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமையும் என்பது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் உங்க ளுக்குத் தெரியும். எங்களைப் பொறுத்தவரை திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இப் போதைக்கு இடமில்லை. நாங் களும், திமுகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் அநீதிகளை எதிர்ப்பதற்குதான் ஒரே குரலாக ஒலிப்போம் என்றுதான் கூறினேனே தவிர, அந்த கட்சியுடன் கூட்டணி என்று கூறவில்லை.
மதுவே உயிருக்கு கேடு. இதில் கலப்படம் செய்தால் 30 ஆண்டு களில் சாகக்கூடியவர் 3 மாதத்தில் இறந்துவிடுவார். இந்த நிலை ஏற்பட்டால் இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
முன்னதாக பிரதிநிதிகள் மாநாட் டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: பாஜக ஆட்சியால் சாமானிய மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அரசு நிதி வீணாகிறது. உதாரணமாக தூய்மை பாரதம் திட்ட விளம்பரத்துக்காக மட்டும் ரூ.94 கோடி செலவிடப்படுள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன் நாட்டிலி ருந்து தப்பியோடி தலைமறைவாக உள்ள, பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆளான லலித் மோடிக்கு ஆதரவாக பாஜக வின் மூத்த அமைச்சரே பரிந்துரை கடிதம் எழுதுகிறார். இவரைப் போலவே பாஜகவைச் சேர்ந்த மாநில முதல்வரும் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். இந்த விவ காரத்தில் பிரதமர் மோடி இதுவரை பதிலளிக்காதது ஏன்?
நாட்டு மக்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை. ஒரு சில முதலாளிகள், மேட்டுக்குடி மக்களின் முன்னேற்றத்துக்காக நாடு, நாடாகச் சென்று பேசி வரு கிறார் என்றார் ப.சிதம்பரம்.