தமிழகம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் அமமுகவை தொடர்ந்து தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் மக்கள் நீதி மய்யம் கட்சி?

செய்திப்பிரிவு

வ.செந்தில்குமார் 

வேலூர் 

வேலூர் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாததால், அக்கட்சி தேர்தல் புறக்கணிப்பு முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலூர் மக்களவைத் தேர்தலின் போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றார் என்ற குற் றச்சாட்டின் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது, வேலூர் மக்களவைக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடை பெறும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார் பில் தேர்தல் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்தத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் நரேஷ் குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். அமமுக வேட் பாளராக முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மீண்டும் போட்டி யிடுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், வேலூர் மக்கள வைத் தேர்தலில் போட்டியிட வில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினக ரன் அறிவித்துவிட்டார். அமமுகவில் நிலவும் குழப்பமான சூழல், கட்சி சின்னம் தொடர்பான தொடர் பிரச் சினைகளால் தேர்தலில் போட்டியிட வில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் குறிப்பிட்ட வாக்கு சதவீதம் பெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் என்.ராஜேந்திரன் 23,771 வாக்குகள் பெற்று நான்காமிடம் பிடித்தார். எனவே, வேலூர் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட் பாளராக மீண்டும் சுரேஷ்குமார் போட்டியிடுவாரா? அல்லது வேறு யாராவது வேட்பாளராக நிறுத் தப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

18-ல் மனு தாக்கல் முடிவு

வேலூர் தேர்தலுக்கான மனுத் தாக்கல் வரும் 18-ம் தேதியுடன் முடிவதால், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருவது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமமுகவைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யமும் தேர்தலை புறக் கணிக்கும் முடிவில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி நிர் வாகிகள் சிலரிடம் விசாரித்தபோது, ‘‘ஏற்கெனவே மார்ச் 16-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் முடிக்கப்பட்ட நிலையில், திடீரென தேர்தலை நிறுத்திவிட்டார்கள். அந்தத் தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதற்கு தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால், தலைமையில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பதால் தொண்டர்கள் மத்தி யில் ஆர்வம் குறைந்துள்ளது. ஏற் கெனவே தேர்தலுக்காக செலவு செய்துள்ளோம். தொண்டர்களும் தங்கள் உழைப்பைக் கொடுத் திருக்கிறார்கள். கமலஹாசன் பிரச் சாரத்துக்கு வரும்போது மக்களும் ஆர்வத்துடன் வரவேற்பு கொடுத் தனர். அதன் பலன் என்னவென்று வேலூர் தேர்தலில் தெரியாமலே இருப்பதை ஏற்க முடியவில்லை. மனுத்தாக்கலுக்கு குறுகிய காலமே இருக்கிறது. அதற்குள் வேட்பாளர் தேர்வை அறிவித்தால் மீதம் இருக்கின்ற நாட்களில் பிரச்சாரம் செய்யவும் தயாராக இருக்கிறோம்’’ என்றனர்.

புதிய வேட்பாளரை நிறுத்த திட்டம்?

சென்னையில் உள்ள கட்சித் தலைமை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘வேலூர் தொகுதிக்கு தற்போதைய சூழலில் ஏற்கெனவே அறிவிக்கப் பட்டுள்ள வேட்பாளர் சுரேஷ்குமாரை நிறுத்தினால் அதிக வாக்குகளை பெற முடியாது. எனவே, புதிய வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சுரேஷ்குமார் அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் சற்று இழுபறி நீடித்து வருகிறது. இது தொடர்பாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி வேறு வேட்பாளரை அறிவிப்பதா அல்லது தேர்தலை புறக்கணிப்பதா என்று கமல்ஹாசன் இன்று அல்லது நாளை அறிவிப்பார்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT