ஈரோடு அருகே போலி மதுபான ஆலை நடத்திய ஏழு பேரை மதுவிலக்குப் போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மட்டுமல்லாது, மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முறைகேடாக மது விற்பனை நடந்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, அனைத்து காவல்நிலையங்களிலும் மாதத் தில் சராசரியாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி வரும் நிலையில், இவற்றின் பின்னணியில் போலி மது விற்பனை தொடர்ந்து நடந்து வருவதாக மதுவிலக்குப் போலீஸார் சந்தேகித்தனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு பெருந்துறை - பவானி நெடுஞ்சாலையில் வாகனச் சோதனை மேற்கொண்ட போது, மூன்று கார்கள் வாகனத் தணிக் கைக்கு நிற்காமல் சென்றன. மதுவிலக்குப் போலீஸார் விரட் டிச் சென்று காரை மடக்கிப் பிடித்தனர். காரில் போலி மதுபான பாட்டில்களை அவர்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்த பெருந்துறை மற்றும் பவானியைச் சேர்ந்த மாதேஷ் (42), சம்பத்குமார் (45), ராஜேஷ் (44), சரவணகுமார் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் தொடர்புடைய, சேலம் எடப்பாடியை அடுத்த சின்னப்பம் பட்டியைச் சேர்ந்த குமார் (29), வெங்கடாசலம் (29), அர்த்தநாரி (33) ஆகியோரை மதுவிலக்குப் போலீஸார் கைது செய்தனர்.
பல்வேறு பகுதிகளில் விற்பனை
பெருந்துறையை அடுத்த வாவிகடை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில், இவர்கள் ஏழு பேரும் சேர்ந்து போலியாக மதுபானம் தயாரித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற் பனை செய்து வந்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து போலி மதுபானம் அடைக்கப்பட்ட பாட் டில்கள், 30 லிட்டர் எரிசாராயம், காலி மதுபாட்டில்கள், ஹாலோ கிராம் கொண்ட போலி லேபிள் கள், ஹைட்ரோ மீட்டர்கள், கலர் எசென்ஸ் பாட்டில்கள், மதுபானங் களை பாட்டிலில் அடைக்கும் இயந் திரம் மற்றும் மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.