திருநெல்வேலி
திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லையப்பர், காந்திமதி அம் பாள் கோயில் ஆனிப் பெருந் திருவிழாவில் நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா தேரோட் டம் சிறப்பாக நடைபெறும். நடப்பாண்டு இத்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் காலை, இரவில் ரதவீதி களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர்.. கோயில் வளாகத்திலுள்ள கலைய ரங்கில் ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம், பொம்மலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச் சிகள் நடைபெற்றன.
திருவிழாவில் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம் பாளை தேர்களில் எழுந்தருளச் செய்யப்பட்டது. முதலில் விநாயகர், சுப்பிரமணியர் சுவாமி தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையம் சேர்ந்தன.
தொடர்ந்து, காலை 8.45 மணி யளவில் தமிழகத்தின் 3-வது பெரிய தேரான சுவாமி நெல்லையப்பர் தேர் இழுக்கப்பட்டது. திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேருக்கு முன்னால் கோயில் யானை காந்திமதி அலங் கரிக்கப்பட்டு பவனி வந்தது. சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங் களை இசைத்தனர். பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பக்திப் பெருக்குடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
மழையால் பரவசம்
4 ரத வீதிகள் வழியாக பவனி வந்த தேர் மாலை 4.30 மணிக்கு நிலையம் சேர்ந்தது. பின்னர் காந்திமதி அம்மன் தேரும், இறுதி யாக சண்டிகேஸ்வரர் தேரும் இழுக்கப்பட்டன. மதியத்துக்கு பிறகு லேசான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸார் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத் தியும், வானூர்தி கேமராக்களை பறக்க விட்டும் போலீஸார் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்ன தானம் வழங்கப்பட்டது.
ஆனிப் பெருந்திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக இன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.