சென்னை
அஞ்சல் துறையில் காலியாக உள்ள தபால்காரர், மெயில்கார்டு, உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி என தமிழகம் முழுவதும் 4 இடங்களில் நேற்று நடைபெற்றது. இத்தேர்வை 989 பேர் எழுதினர்.
இந்திய அஞ்சல் துறையின் கீழ், நாடுமுழுவதும் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் காலியாக உள்ள தபால்காரர், மெயில் கார்டு, உதவியாளர், பன்முகத் திறன் ஊழியர் உட்பட பல்வேறு பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளுக்கான வினாத்தாள் கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் உள் ளூர் மொழி என மூன்று மொழி களில் அமைந்திருக்கும்.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு அஞ்சல் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடந்தது. இதில் ஹரியாணா, பிஹார் உள்ளிட்ட வடமாநில மாணவர்கள் தமிழ் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, கடந்த 4 வருடங்களாக அஞ்சல் துறைகளுக்கான தேர்வு கள் ஏதும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, காலிப் பணியிடங் களை நிரப்பக் கோரி அஞ்சல்துறை ஊழியர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து, கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அஞ்சல் துறை எழுத்தர் மற்றும் ஏற்கெனவே பதவியில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு, மற் றும் பன்முக திறன் கொண்ட ஊழியர்களுக்கான தேர்வு, தபால் காரர் பதவி உயர்வுக்கான தேர்வு ஆகியவற்றுக்கான அறிவிப்பை அஞ்சல் துறை அண்மையில் வெளி யிட்டது. இதற்கான தேர்வு நேற்று நடைபெறும் என அறிவிக்கப் பட்டது.
இதற்கிடையே, மத்திய தொலை தொடர்பு துறை கடந்த 11-ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், இனி அஞ்சல் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும். 2-ம் தாள் தேர்வை உள்ளூர் மொழிகளில் எழுதலாம். அதில் எந்த மாற் றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த அறி விப்பு தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதி மன்ற கிளையிலும் நேற்று முன் தினம் அவசர வழக்குத் தொடரப் பட்டது. வழக்கை விசாரித்த நீதி மன்றம் தேர்வை நடத்த அனுமதி வழங்கியது. ஆனால், தேர்வு முடிவு களை வௌியிட தடை விதித்தது. இதையடுத்து அஞ்சல் துறை தேர்வு நேற்று நடைபெற்றது.
கிராமப்புற அஞ்சலக ஊழியர் கள் அஞ்சல் துறை எழுத்தராக பதவி உயர்வு பெறுவதற்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடை பெற்ற இத்தேர்வை அஞ்சல் துறை யில் ஏற்கனவே பணியாற்றி வரக் கூடிய 989 பேர் பதவி உயர்வு, பணி நிரந்தரம் பெறுவதற்காக எழுதினர். 150 மதிப்பெண்களை கொண்ட இத்தேர்வு 3 மணி நேரம் நடைபெற்றது. ஆங்கிலம் மற் றும் இந்தியில் தேர்வு நடைபெற் றதற்கு தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.