தமிழகம்

மூன்றாம் நபர் காப்பீடு இல்லாமல் விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை ஏலத்தில் விற்று இழப்பீடு வழங்க முடிவு: விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசு திட்டம்

செய்திப்பிரிவு

க.சக்திவேல்

கோவை

மூன்றாம் நபர் காப்பீடின்றி விபத்து ஏற்படுத்திய வாகனங்களை ஏலத் தில் விற்பனை செய்து கிடைக் கும் பணத்தை பாதிக்கப்பட்டவர் களுக்கு இழப்பீடாக வழங்கும் வகையில் மோட்டார் வாகன இழப் பீட்டு விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசுவரவு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

விபத்து ஏற்படுத்திய வாகனத் தால் பாதிக்கப்படும் நபருக்கு இழப் பீடு வழங்குவதற்காக அனைத்து வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட் டுள்ளது. எனினும், பலர் வாகன காப்பீட்டை புதுப்பிப்பதில்லை. அவ்வாறு காப்பீடு இல்லாத வாக னங்கள் விபத்தை ஏற்படுத்தும் போது, பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தொடர் பான மேல்முறையீட்டு வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன் றம், வாகனத்துக்கு காப்பீடு இல் லாத காரணத்தால் விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் இழப்பீடு பெறும் வகையில் மோட்டார் வாகன இழப்பீட்டு விதிகளில் சில திருத் தங்களை மேற்கொள்ள அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், டிஜிபி-க்களுக்கு கடந்த 2018 மார்ச் 26-ம் தேதி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடந்த ஜூன் 19-ம் தேதி பிறப்பித்த அரசாணையில் கூறி யிருப்பதாவது:

காப்பீடு செய்யப்படாத வாக னங்கள் விபத்தை ஏற்படுத்தும் போது பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக் கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டிருந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு மோட் டார் வாகன விபத்து இழப் பீட்டு தீர்ப்பாய விதிகள்-1989-ல் தகுந்த திருத்தங்களை மேற் கொள்ள வேண்டும் என போக்கு வரத்து ஆணையர் அரசுக்கு கடி தம் எழுதியிருந்தார். அதை ஏற்று, விதிகளில் திருத்தம் செய்ய வரைவு அறிவிப்பாணை வெளி யிடப்படுகிறது. விதிகளில் திருத் தத்தின்படி, மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத வாகனம் ஏற்படுத்திய விபத்தால் உயிரிழப்பு, உடலில் காயங்கள், உடமைகள் சேத மாகும்போது உரிய இழப்பீடு வழங்குவதற்கான தொகைக்கு வாகன உரிமையாளர் உத்தர வாதம் அளிக்காவிட்டால் சம்மந்தப் பட்ட வாகனத்தை நீதிமன்றம் விடுவிக்கக்கூடாது.

மேலும், வாகனத்துக்கு மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத சூழலில், 3 மாதங்களுக்கு மேல் போலீஸாரின் கட்டுப்பாட்டில் வாகனம் இருந்தால், சம்மந்தப்பட்ட பகுதி மாஜிஸ்ட்ரேட் வாகனத்தை பொது ஏலத்தில் விற்பனை செய்து, அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்குவதற்காக 15 நாட்களுக்குள் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் செலுத்த வேண்டும்.

இந்த வரைவு அறிவிப்பாணை வெளியிடப்பட்ட 30 நாட்களுக்கு பிறகு, விதிகளில் திருத்தம் செய் யப்படும். இதுதொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை, கருத்துகள் இருந் தால் அறிவிப்பாணை வெளியிட்ட 30 நாட்களுக்குள் ‘அரசு கூடுதல் தலைமை செயலர், உள்துறை, தலைமை செயலகம், சென்னை-600009’ என்ற முகவரியில் தெரி விக்கலாம். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT