தமிழகம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் சுற்றுலா அதிகாரி பணியிடங்கள் காலி; சுற்றுலாவில் முதல் மாநில அந்தஸ்து பறிபோகும் அபாயம்

செய்திப்பிரிவு

ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் சுற்றுலாத் துறை அதிகாரி பணி யிடம் காலியாக உள்ளது. அத னால், தேசிய அளவில் சுற்றுலா வில் முதல் மாநிலம் என்ற அந்தஸ்தை தமிழகம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொன்மையான வரலாற்றை யும், தனித்துவமான கலாச்சாரத் தையும் கொண்ட தமிழகத்தில் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், புகழ்பெற்ற கோயில்கள், கோடை வாசஸ்தலங்கள், அழகிய கடற்கரை கள், சரணாலயங்கள் உள்ளன.

இதில் சென்னை, கொடைக் கானல், மதுரை, ஊட்டி, கன்னி யாகுமரி, தஞ்சாவூர், ராமேசுவரம், திருச்சி, மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை அதிகம் ஈர்க்கும். தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மதுரை மூன்றாவது இடத்தில் உள்ளது.

சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கவும் சுற்றுலா அதிகாரி கள், அந்தந்த மாவட்ட நிர்வாகங் கள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்குவது, அதற்கான நிதி ஒதுக்கீடு பெறுவது, திட்டங்களை செயல்படுத்தி கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், தற்போது தமிழகத்தில் 8 மாவட்டங்களில் சுற்றுலா அதிகாரி பணியிடம் நிரப்பப்படவில்லை.

அதுபோல், 30-க்கும் மேற்பட்ட உதவி சுற்றுலா அதிகாரி பணி யிடங்களும் காலியாக உள்ளன. அதனால், ஒவ்வொரு மாவட்ட சுற்றுலா அதிகாரிகளும் அருகில் உள்ள மாவட்டங்களை கூடுதலாக வாரத்துக்கு 2 நாட்கள் அங்கு சென்று கவனிக்கின்றனர். அதனால், இரண்டு மாவட்டங்களில் சுற்று லாத் துறை வளர்ச்சியும் பாதிக்கப் படுகிறது.

இதுகுறித்து சுற்றுலாத் துறை ஊழியர்கள் கூறியதாவது: முன்பு டிகிரி முடித்துவிட்டு சுற்றுலா சம்பந்தமான டிப்ளமோ அல்லது எம்ஏ, எம்பிஏ படித்தவர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் உதவி சுற்றுலா அதிகாரியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணிநியமனம் செய்யப்பட் டனர். இவர்களே பதவி உயர்வு பெற்று சுற்றுலா அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர்.

கடைசியாக 2011, 2012-ம் ஆண்டு களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 24 பேர் உதவி சுற்றுலா அதிகாரியாக பணி நிய மனம் செய்யப்பட்டனர். ஆனால், இவர்களுக்கு தற்போது வரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால், கடந்த ஜனவரியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நேரடியாக 5 பேர் சுற்றுலா அதிகாரி யாக நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்களை நியமித்த பிறகும், தற்போது தமிழகத்தில் கொடைக் கானல், காரைக்குடி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பூர், ஊட்டி, நாமக்கல், தேனி ஆகிய 8 மாவட்டங்களில் சுற்றுலா அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.

விருதுநகர் அதிகாரி தேனியை யும், மதுரை சுற்றுலா அதிகாரி, கொடைக்கானலையும், திருச்சி சுற்றுலா அதிகாரி நாமக்கல்லையும், கோவை சுற்றுலா அதிகாரி ஊட்டி யையும் கூடுதலாக கவனிக்கின் றனர். சுற்றுலா அதிகாரி இல்லாத மாவட்டங்களில் சுற்றுலாத் திட்டங்கள் முடங்கி உள்ளன.

சுற்றுலா மேம்பட அந்தந்த மாவட் டங்களில் சுற்றுலா அதிகாரிதான், மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்ட நிர்வாங்களுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து, ஆட்சியர் மூலம் சுற்று லாத் துறைக்கு அனுப்ப வேண்டும்.

ஆண்டுக்கு மத்திய சுற்றுலாத் துறை ரூ.500 கோடி வரை தமிழ கத்துக்கு ஒதுக்கும். அதுபோல, தமிழக அரசு ரூ.100 கோடியை அனைத்து மாவட்ட சுற்றுலா வளர்ச் சித் திட்டங்களுக்கும் ஒதுக்கும். இந்த நிதியை பெற்று திட்டங் களை செயல்படுத்தும் சுற்றுலா அதிகாரிகள் இன்றி 8 மாவட்டங் களில் பணிகள் முடங்கி உள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து தேசிய அளவில் முதல் இடத்தில் உள்ள தமிழகத்தின் இடம் பறிபோக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT